இலங்கை

குழந்தைப் பிள்ளையின் எலும்புக் கூடு உட்பட நேற்றும் 8 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை குழந்தைப் பிள்ளையின் எலும்புக் கூடு உட்பட புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 36வது நாளாக கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டது. ஆறு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதில் குழந்தைப் பிள்ளையின் எலும்புக் கூட்டை அப்படியே முழுமையாக எடுக்கும் முயற்சிகள் மிகக் கவனமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை மொத்தமாக 177 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டது.

நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மொத்தமாக 164 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.சான்றுப் பொருட்கள் எவையும் அடையாளம் காணப்படவில்லை – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *