மர்ம நபர்கள் நடத்திய தீ வைப்புத் தாக்குதல்: லண்டன் இந்திய உணவகத்தில் பயங்கரம்

லண்டனின் இல்ஃபோர்டு பகுதியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய தீ வைப்புத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
இல்ஃபோர்டில் உள்ள உட்ஃபோர்டு அவென்யூவில் அமைந்திருக்கும் ‘இந்தியன் அரோமா’ என்ற உணவகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 3பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக லண்டன் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் குறித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
![]()