இலங்கை

சிறார்களது எலும்புக் கூடுகளும் வருகிறது; அவை உள்ளிட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்வு

சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 8 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணி நேற்று புதன்கிழமை தினம் 35 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.நேற்றைய அகழ்வுக்கு பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறிய சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா மேலும் கூறுகையில்,

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன.இதுவரை மொத்தமாக 169 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டது.

சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 8 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .

நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மொத்தமாக 158 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *