இலங்கை

4 முன்னாள் ஜனாதிபதிகள் இலக்கு; அடுத்தது யார்?

கடந்த ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகள் 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலொரு நடவடிக்கையாகவே கடந்த 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக எதிர்காலத்தில் அந்தந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராகி வருவதாகவும், ரணில் விக்கிரமசிங்கவின் கைதை தொடர்ந்து அவர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *