இலங்கை
ரணில் கைது – பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுராவை தொடர்பு கொண்டதாக தகவல்

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கையை தொடர்பு கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, இந்த உரையாடலில் ஜனாதிபதி அனுர, வழக்கு சட்டத்தின் படி நடத்தப்படும் என்றும் எந்த விதத்திலும் சட்ட நடைமுறைகள் மீறப்படமாட்டாது என்றும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
“இன்னும் சில நாட்களில் இந்த விஷயத்துக்கான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்,” என ஒரு இலங்கை செய்தியாளர் மேற்கோள் காட்டியுள்ளார்.
![]()