நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்; அச்சத்தால் இறுதி செய்திகளை அனுப்பிய பயணிகள்!

இத்தாலியில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த காண்டோர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஒரு இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கிரேக்கத்தின் கோர்ஃபுவிலிருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நோக்கி 273 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் போயிங் 757 விமானம் கடந்த சனிக்கிழமை (16) பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
விமானம் புறப்பட்டு சுமார் 40 நிமிடங்கள் ஆன நிலையில், விமானத்தின் வலது இறக்கை தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் பயணிகள் தங்கள் உயிருக்கு பயந்து, இறந்துவிடுவோம் என்று நினைத்து, குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விடைபெறும் செய்திகளை அனுப்பத் தொடங்கினர்.
இதையடுத்து விமானி, விமானத்தைத் திருப்பி இத்தாலியின் பிரிண்டிசியில் அவசரமாக தரையிறக்கினார்.
தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்கள் மோசமான அச்சங்களிலிருந்து தப்பித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அதில், நாங்கள் திடீரென்று ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டோம், அதன் பிறகு எஞ்சினிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்கியது, இது ஒரு பயங்கரமான அனுபவம் என்றார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தரையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ விமானம் தீப்பிடிப்பதைக் காட்டுகிறது.
![]()