ஹர்த்தாலை தோற்கடித்ததற்காக வட , கிழக்கு மக்களுக்கு நன்றி; பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறுகிறார்

தமிழரசுக்கட்சியின் ஹர்த்தாலை தோற்கடித்த வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பணச் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
தமிழரசுக்கட்சி விடுத்த ஹர்த்தால் அழைப்பு வடக்கு கிழக்கில் வெற்றி என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹர்த்தால் தோல்வி என்றே குறிப்பிட வேண்டும். வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இரண்டாவது தடவையாகவும் இனவாதத்தை தோற்கடித்துள்ளார்கள். எனவே வடக்கு , கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரனின் நிலை கவலைக்குரியது. கடந்த காலங்களில் இவர் நடுநிலையான தன்மையில் செயற்பட்டார் ஆனால் தற்போது தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாத சேற்றுக்குழியில் விழுந்துள்ளார் என்றார்.
![]()