இலங்கை

சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்திற்கு அரசு அங்கீகாரம்; 24 மணித்தியாலமும் இயங்கும்

அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (சி இ ஆர் ரி ) மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு நவடிக்கை நிலையத்தை மையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜ யதிஸ்ஸ இன்று ஊடகங்களுக்கு உரையாற்றினார். இதுபோன்ற சம்பவங்கள் தனியார் மற்றும் உணர்திறன் மிக்க தரவுகள் கசிவதற்கு வழிவகுக்கும்,என்பதுடன் தனிப்பட்ட பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை, பொது சுகாதாரம், நல்லாட்சி மற்றும் அரசு நிறுவனங்களின் மீதான பொது நம்பிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிதாக நிறுவப்பட்டநிலையம் 24 மணி நேரமும் செயற் படுவதுடன் தொடர்ந்து கண்காணித்து, அடையாளம் கண்டு, சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் அத்துடன் . தீங்கிழைக்கும் மென்பொருள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் முயற்சிகளைக் கண்டறிந்து புகாரளிப்பதற்கான வசதிகளையும் இது வழங்கும்.

, டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுக் களின் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலை யத்தின் சேவைகளை தொடர்ச்சியான அடிப்படையில் பெறுமாறு வழிகாட்டும் ஒரு முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *