இலங்கை
மாகாணசபை தேர்தல்கள் குறித்து உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்தல் !

மாகாணசபை தேர்தல்கள் குறித்து, உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த வலியுறுத்தலை இன்று விடுத்துள்ளார்.
இந்தநிலையில். மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச் அபயரத்ன பதிலளித்துள்ளார்.
உரிய காலத்தில் இதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()