2026 ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாம் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலை நடத்தினோம். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.
சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதால் அவற்றை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அரசியலமைப்பைக் கொண்டுவருவது தொடர்பில் எம்மிடம் கொள்கை ரீதியான தீர்மானம் உள்ளது.
அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயற்பாடு என்பதால் அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எமது இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தை ஆரம்பிப்போம் என்றார்.
![]()