புலம்பெயர் தமிழருக்காகவே மாகாண சபைகளுக்கு தேர்தல்; விமல் கூறுகின்றார்

பிரிவினைவாத புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தி மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை திருப்திப்படுத்தி மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும்.மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.
இதேவேளை அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சார சபை (திருத்தச்) சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தி துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றார்.
![]()