கதைகள்

ஆகாயப் பந்தல்…. (தொடர்- 10)…. ஏலையா க.முருகதாசன்

அந்தப் பறவைகளிரண்டும் அவளையே கூர்ந்து பார்ப்பதும் பிறகு அங்குமிங்குமாகப் பறந்துவிட்டு வந்திருப்பதுமாக இருந்தன.

சாரிணி கொடுத்த பழரசத்தை குடித்துக் கொண்டே கடைக்கண்ணால் சரவணனைப் பார்த்தாள் மதுசா, சரவணன் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு மனிதன் ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கும் போதும் ஒரு குறிப்பிட்ட அலுவல் எதுவுமில்லாதிருக்கும் போதும் பார்வை ஒருசில விநாடிகள் குத்திட்டு நிற்பதும் பின்னர் அங்குமிங்குமாக கண்கள் சுழன்று கொண்டிருப்பதும் அப்போதும் அவனது மனம் ஒரு நிலையில்லாது எதையெதையெல்லாமோ நினைச்சுக் கொண்டிருப்பதும் மனித இயல்பு.
ஆனால் சரவணன் ஆகாயத்தை நோக்கி பார்ப்பது ஆகாயத்தையே ஊடுருவிப் பார்ப்பது போலவும் அவனுடைய கண்ணுக்கு மட்டுமே ஏதோ புலப்படுவது போலவும் அதை அவன் வைச்ச கண் வாங்காது பார்ப்பது போலவும் இருந்தது.

மதுசா பழரசத்தைக் குடிச்சுக் கொண்டே தமையனைக் கடைக்:கண்ணால் பார்ப்பதைக் கவனிச்ச சாரிணி ஏனண்ணி கடைக்கண்ணாலை அண்ணையைப் பார்க்கிறியள் நேராக நன்றாகப் பாருங்களேன் என்றவளிடம் நான் கடைக்கண்ணால் பார்த்தேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று மதுசா கேட்க,அண்ணி உங்களை உங்கடை வீட்டிலிருந்து அண்ணை கூட்டிக் கொண்டு வந்த போதிலிருந்து கவனிச்சுக் கொண்டுதானிருக்கிறேன்.

காரிலிருந்து இறங்கி வீட்டு வாசல்வரையும் வந்த நீங்கள் அண்ணையைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தீர்கள்.அந்தப் பார்வை எனக்கு உங்களைப் பற்றி ஆயிரம் கதை சொல்லிற்றுது அண்ணி என்கிறாள் சாரிணி.

மனதில் இருப்பதைக் கண்கள் சொல்லும் அதை கண்களின் சொந்தக்காரரின்ரை வாய் மறத்தாலும் கண்கள் அதை மறுக்காது.

நீங்கள் வீட்டுக்குள் மஞ்சள் ரோஜாப் பூக்களுடன் வந்தவுடனேயே அம்மாவிடம் போய் அவர் காதுக்குள் அம்மா! உங்களுக்கு ஒரு அழகான கம்பீரமான மருமகளை உங்கடை மகன் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டன்,அண்ணி நான் ஒரு உளவியல் படிக்கும் மாணவி.மனிதர்களின் உடலும் உறுப்புகளும் மனமும் எவ்வாறு எந்த நேரத்தில் செயல்படும் என்பதைப் படித்துக் கொண்டிருப்பவள் அதோடை அண்ணி நான் சோக்கிரட்டீஸ்,பிளாட்டோ,அரிஸ்டாட்டில்,சிக்மண்ட் பிராய்ட்,கார்ல்மார்க்ஸ் போன்ற பெரும் பல்துறை தத்துவஞானிகளின் தத்துவங்களை வாசித்துக் கொண்டிருப்பவள் என்று சொல்லிக் கொண்டு வந்தவள் அதோடை எங்கடை கிரக என்று வாய்தடுமாறி வந்த சொற்களை வலிந்து நிறுத்தியவள் பேச்சைத் திசை திருப்பும் நோக்கில் அண்ணி நீங்கள் வந்து இவ்வளவு நேரமாகியும் நீங்கள் யூனிவேர்சிற்றியில் என்ன பாடங்களைப் படிக்கிறியள் என்று கேட்காமல் விட்டிட்டன் என்றவள்,மதுசா தனது படிப்பைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள் எனக் காத்திருந்தவளுக்கு தான் விவசாயம்,பொருளாதாரம்,தொழில்துறைகள் கணக்கியல் போன்றவற்றினைப் படிப்பதாகவும் அதுபற்றிய ஆய்வப் படிப்பினை விசேடமாக படிப்பதாகக்கூறியவள் நான் என்ன படிக்கிறன் என்பதை அவருக்கும் சொல்லியிருக்கிறேன் என்று கண்களால் மட்டுமே சரவணனைக் காட்டிச் சொல்லியதும் அவருக்கு என்ற சொல் தன்னைச் சுட்டித்தான் சொல்லப்படுகின்றது என்பதை உணர்ந்த சரவணன் மதுசாவைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்கிறான்.

எல்லாவற்றையும் கவனிக்காதது போல கவனித்த சாரிணி ம் இங்கை என்ன நடக்குது என்று எனக்கும் கொஞ்சம் விளங்கும் அண்ணி என்றவள் எல்லாம் சரி அண்ணி யூனிவேர்சிற்றியில் விவசாயத்தை முக்கிய பாடமாக எடுத்துப் படிக்கிறியளே அதுதான் எனக்கு விளங்கவில்லை என்றவளுக்கு அரைச்சுவரில் உட்கார்ந்து கைகல் இரண்டையும் ஊன்றியவள் சாரிணியைப் பார்த்து இந்த உலகத்தில் வாழம் மனிதர்களுக்கு எது தேவையோ தேவையில்லையோ உணவு மிக மிகத் தேவையானது.

உணவு இல்லையெனில் யாருமே உயிருடன் இருக்க முடியாது.பசி என்பது தாங்கிக் கொள்ள முடியாதது.பசிக்கிறவனுக்கு உணவே இல்லையென்று ஒரு நிலை ஏற்படும் போது இந்த உலகம் ஆகா ஓகோ என்று கொண்டாடுகிற வைரமோ,வைடுரியமோ,உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது அந்தந்த நாடுகளிலிருக்கும் பவுனின் தொகைதான் என்ற போலி நம்பிக்கையோ அவை நேரடியாக அவனின் பசியைப் போக்காது.ஒரு அவல் சோறுதான் இவையெல்லாவற்றையும்விட பெறுமதியானது.உணவைவிட இந்த உலகில் எவையுமே பெறுமதியானவையல்ல அதனால்தான் சுழன்றும் ஏர்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கின்றது என மதுசா சாரிணியைப் பார்த்துச் ஒரு விரவுரையே நடதஇதியது போல சொல்லிய போது,உணவுக்கு மதுசா கொடுத்த மதிப்பு அவளின் உறுதியான குரலில் தொனித்தது.

விவசாயத்தின் மீதும்,உணவின் அதிமுக்கிய தேவையின் மீதும் தனக்கு அண்ணியாக வரப்போகிறவள் வைச்சிருக்கும் மதிப்பைப் பார்த்து மெய்சிலித்த சாரிணி அவளையறியாமலே எங்களுடைய குடும்பம் குடுத்து வைச்ச குடும்பம் என அவள் தனக்குள் சொல்வதாக நினைச்சுக் கொண்டு பக்கத்திலிருந்த மதுசாவுக்கும் கொஞ்சம் தள்ளியிருந்த சரவணனுக்கும் கேட்கத்தக்கதாகச் சொல்லியதைக் கேட்ட மதுசா உங்களுடைய குடும்பம் குடுத்து வைச்சதா யாராலை குடுத்து வச்சது என்று கேட்க அண்ணி எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் என்கிறாள்.தங்கச்சியார் யாரை நினைச்சு சொன்னவள் என்பதை சரவணன் புரிஞ்சு கொள்கிறான்.

அவனும் தங்கச்சியார் குடுத்த பழரசத்தை இரசிச்சு இரசிச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் ; குடிப்பதும் ஆகாயத்தில் ஏதே தேடுவது போலப் பார்ப்பதும் பிறகு பறவைகளைப் பார்ப்பதுமாக இருந்தான்.

அப்பொழுது சரவணன் சாரிணியின் தாயார் சசிகலா சமையல் முடிஞ்சிட்டுது சாப்பிட வாங்கோ எனக் கூப்பிட்டுக் கொண்டே வீட்டுக்கு வெளியே மதுசா,சாரிணி,சரவணன் ஆகியோர் இருந்த பந்தி பந்தி போன்ற அறையை நோக்கி வருகிறாள்.

சுசிகலாவின் பார்வையில் முதலில் பட்டது அந்தப் பறவைகளிரணடு;மே அவை மனிதர்கள் பார்ப்பது போல யாரையோ வைச்ச கண் வாஙகாமல் கூறுகுறிப்பாகப் பார்ப்பதைக் கண:டவள் யாரைப் பார்க்கின்றன என்பதை கவனிக்கிறாள்.

அவையிரண்டும் மதுசாவையே ஊடறுத்துப் பார்ப்பதைக் கண்டவள் இந்தப் பறவைகள் தனக்கு என்ன விசயத்தைச் சொல்லப் போகின்றன என்ற தவிப்புடன் அவைற்றைப் பார்க்க,சசிகலாவின் பக்கம் பார்வையைத் திருப்பியவை தலையை ஆட்டிப் புன்னகைத்தன.
பறவைகள் புன்னகைப்பதை உணர முடியமா என்றால் அது முடியும் பறவைகளுடனும் விலங்குகளுடனும் நாள்தோறும் பழகுபவர்களுக்கு அவற்றின் அத்தனை உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

தங்களிடம் ; அன்பு காட்டி நெருக்கமாகப் பழகும் மனிதர்களிடத்தில் அவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் மனநிலையைக் கண்டறியும் உளவியல் சக்தி பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உண்டு.

வீட்டில் உள்ளவர்கள் கவலையில் இருந்தால் அவர்கள் வளர்க்கும் விலங்குகளும் பறவைகளும் சோர்ந்து சோகமாகிவிடுவதுண்டு.அதே போல வீட்டிலுள்ளவர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் அவையும் மகிழ்ச்சியாக குரலெழுப்பி உற்சாகத்துடன் இருப்பதைக் காண முடியும்.

அந்தப் பறவைகள் இரண்டும் பூமிக்குரிய பறவைகளே அல்ல.சசிகலா குடும்பமும் வேற்றுக் கிரகத்தோடு தொடர்புடையவர்கள் போல அந்தப் பறவைகளும் அவர்களின் கிரகத்தைச் சேர்ந்த பறவைகளே.

அந்தப் பறவைகள் பேசும் மொழியை சசிகலா,மகேந்திரராஜா,சரவணன் ,சாரிணி ஆகியோரால் விளங்கிக் கொள்ள முடியும்.

என்ன என்பது போல பறவைகளைச் சசிகலா பார்க்க அவை புன்னகைப்பதையம் குரலெழுப்பிச் சொன்னதையம் கேட்ட சசிகலாவின் முகம் மலர்கின்றது.

ஏற்கனவே மதுசாதான் தங்கள் மகனுக்கு மiவியென்று தீர்மானித்துவிட்ட சசிகலா மகேந்திரராஜவின் தம்பதிகளின் எண்ணத்தை பூர்த்தி செய்வது போல எங்கள் கிரகத்துக்கு ஏற்ற மருமகளேதான் எனப் பறவைகளின் சமிக்ஞை இருந்ததால் சசிகலா பூரிப்படைஞ்சாள்.
அந்தப் பூரிப்புடனே மஞ்சள் சீலையில் தெவிட்டாத அழகியாகவிருந்த மதுசாவிற்கருகில் சென்றவள் மருமகளே என்று வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிவிடுகிறாள். சுhரிணி, தனக்கும் தாயார் மதுசாவைக் கொஞ்சுவதற்கும் சம்பந்தமில்லை என்பது போல அரைச்சுவரில் காலாட்டியபடி எங்கேயோ பார்த்தபடி இருக்க, சரவணன் தன் தாயாரிடம் அம்மா என்னோடு யூனிவேர்சிற்றியில் படிக்கிற நல்ல குணமான அழகியிருக்கிறாள் என்று ஒரு நாள் சொன்னதை ஞாபகத்தில் வைச்சிருந்த சசிகலா மகனின் விருப்பத்தை அவன் சொல்லாமலே உணர்ந்து அவளைக் கூட்டிவரும்படி சொல்ல இன்று மதுசாவைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்பது சசிகலாவுக்கும்,மகேந்திரராஜாவுக்கும்,சரவணனுக்கும் சாரிணிக்கும் தெரிந்த இரகசியம் மட்டுமே தவிர மதுசாவுக்கோ,மதுசாவின் தாய்தகப்பனுக்கோ தெரியாது.
மதுசாவின் தலையைத் தடவி தனது வாஞ்சையை வெளிப்படுத்திய சசிகலா மருமகளே நீ அழகிகளின் தலைவி என்று சொல்ல நான் மட்டுமா என்ரை மச்சாளும் என்னைவிடப் பெருமழகி மாமி என்று சாரிணியின் தோளில் கைவைச்சுச் சொல்ல சாரிணி மகிழ்ச்சியாகி கண்கள் வியப்பில் அகலமாகி அவள் குதூகளிக்கிறாள்.தன்னை மாமி என்றழைத்ததால் சசிகலா மகிழ்ச்சியடைகிறாள்.

அப்பொழுது சரவணனின் கைத்தொலைபேசி அழைப்பொலி எழுப்புகிறது.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *