உலகம்

ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் – நெதன்யாகு தெரிவிப்பு

காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸிக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவு படுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது.

இருப்பினும், காசாவை கைப்பற்றும் புதிய நடவடிக்கை ஒக்டோபர் மாதம் வரையில் தொடர்வதற்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இல்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத் தயாரிப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் துணை படையினரை இணைத்துக் கொள்வது போன்ற செயற்திட்டங்களை இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று, இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்றையதினத்தில் மட்டும், சுமார் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *