உலகம்

பாகிஸ்தான் இராணுவத்தில் புதிய படை உருவாக்கம்

பாகிஸ்தான் நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் 4 நாட்கள் நடைபெற்ற மோதலை நினைவுகூரும் வகையில், சில முக்கிய அறிவிப்புகளை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வெளியிட்டார்.

அப்போது, பாகிஸ்தான் இராணுவத்தில் புதியதாக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரொக்கெட் படை ஒன்று உருவாக்கப்படும் என அறிவித்தார்.

இருப்பினும், புதியதாக உருவாக்கப்படும் அந்தப் படையின் விபரங்கள் குறித்து எந்தவொரு செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் முப்படைகளின் தளபதிகளும் கலந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவுடனான இராணுவ மோதலில் பாகிஸ்தான் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றதாகக் கூறிய பிரதமர் ஷெரீஃப், இந்தியாவின் அணுசக்திக்கு பதிலளிக்க பாகிஸ்தானின் அணுசக்தி திறன் முக்கிய பங்காற்றும் எனவும், இருநாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு உதவிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *