இலங்கை

குண்டுத்தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை மூடிமறைத்தவர்கள் தற்போது உயர்பதவிகளில்! 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதல் பற்றி கிடைத்த புலனாய்வு தகவல்களை மேசையில் பத்திரப்படுத்தி வைத்து பொறுப்பினை மீறியவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் முழுமையான அரசியலாகிவிட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். இவர் தனது பதவிக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவரை பதவியில் வைத்துக்கொண்டு எவ்வாறு சுயாதீனமான முறையில் விசாரணைகள் இடம்பெறும் என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *