இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு: அடுத்த விசாரணை செப்டம்பர் 11-ல் நடைபெறும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி செய்தல் மற்றும் அதற்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நௌஃபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான வழக்கு  விசாரணைக்கு வந்தது.

கொழும்பு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ள காரணத்தினால், இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 11-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் நௌஃபர் மௌலவி மற்றும் மற்ற 23 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *