கவிதைகள்

“வள்ளி மணாளன் மஞ்சத்தில் வருகிறான்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வள்ளி மணாளன் மஞ்சத்தில் வருகிறான்

உள்ளம் உருகிட திருமுறை ஒலிக்கிது

கள்ளம் களைய கந்தன் வருகின்றான்

மெள்ளவே மஞ்சம் வீதியிலே வருகிறது.

 

வாடிய பயிரென நின்றிடு மடியார்

வாட்டம் போக்கிட மஞ்சத்தில் வருகிறான்

நாடிடும் அடியார் கூடியே குவிகிறார்

வேலவன் மஞ்சம் மெள்ளவே வருகிது

 

மஞ்சம் பார்த்திட மங்கையர் வருகிறார்

தம்பிகள் தங்கைகள் கூடவே இணைகிறார்

அப்பாவும் அம்மாவும் அரோகரா என்கிறார்

அரனார் மைந்தன் மஞ்சத்தில் வருகிறார்

காளையர் கன்னியர் கந்தனின் மஞ்சத்தை

காதலில் கரைந்து கைகூப்பி நிற்கிறார்

வாழ்வினில் வசந்தம் வந்திட அவரும்

வேலவன் அருளை வேண்டியே நிற்கிறார்

 

வீதிகள் எங்கணும் அடியவர் வெள்ளம்

வேலவன் மஞ்சம் மெள்ளமாய் வருகிது

பேதங்கள் அனைத்தும் பறந்துமே போக

பெரும் பொருளாகி முருகனே தெரிகிறான்

 

மஞ்சம் பார்க்க வந்திடு மடியவர்

தஞ்சம் என்றே எண்ணியே வருகிறார்

நெஞ்சம் நிறைய நிம்மதி தருவான்

கந்தக் கடவுள் என்றே குவிகிறார்  !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் …..  அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *