செம்மணிப் புதைகுழிக்கு தடைகளை ஏற்படுத்தோம்; நீதியை நிலைநாட்டுவோம்-அமைச்சர் பிமல்

செம்மணி மனிதப் புதைகுழி தாேண்டும் நடவடிக்கையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அரசாங்கமே மேற்கொள்கிறது. எனவே இந்த விடயத்தில் நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம். இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சிலருடன் இணைந்துகொண்டு யாழ்ப்பாண மாநகர சபையில் ஆட்சியமைக்க இவர்கள் செயற்பட்டுள்ளனர். அங்கு கண்டுபிடிக்கப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகளுக்கு பொறுக்கூற வேண்டிய சிலருடனே வடக்கில் இவர்கள் ஆட்சி அமைத்திருக்கின்றனர் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
செம்மணி மனிதப் புதைகுழி தாேண்டும் நடவடிக்கையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அரசாங்கமே மேற்கொள்கிறது. நாங்கள் இதனை ஆரம்பிக்கும்போது சிறிதளவு எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது 130க்கும் மேற்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சிலருடன் இணைந்துகொண்டு யாழ்ப்பாணம் மாநகரசபையில் ஆட்சியமைக்க இவர்கள் செயற்பட்டுள்ளனர். அங்கு கண்டுபிடிக்கப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகளுக்கு பொறுக்கூற வேண்டிய சிலருடனே இவர்கள் ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
வடமாகாணத்தில் அதிக வாக்குகள் எங்கள் கட்சிக்கே இருக்கிறது. அதனால் அங்கு நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம். இன்று தெற்கு இனவாதம் தாேல்வியடைந்துள்ளதால், ராஜபக்சவினர் ஏதாவது ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இவர்களும் அதனையே செய்ய முயற்சிக்கின்றனர். ஏதாவது சம்பவம் ஏற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். செம்மணி மனிதப் புதைகுழி தோண்டும் நடவடிக்கையை எமது அரசாங்கமே மேற்கொள்கிறது. அதனால் அதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை. வடக்கில் இனவாதத்தைக் கொண்டு வர வேண்டாம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாட்டுக்கு வந்திருந்தபோது, எமது கட்சி காரியாலயத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடினோம். அப்போது செம்மணி எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய வெளிநாட்டுக்கு அனுப்ப காலம் செல்கிறது. அதனால் அதுதொடர்பில் ஆராய்ச்சி செய்யக்கூடிய ஆய்வு கூடம் ஒன்றை எங்களுக்கு பெற்றுத்தருமாறு அவரிடம் கேட்டிருந்தோம். ஏனெனில் மாத்தளை மனித புழைகுழி, மன்னாரில் சதோச கட்டித்துக்கு கீழ் புதைகுழி, யாழ்ப்பாணம் திருக்கேதீஸ்வர புதைகுழி, மண்டை தீவு, கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களில் இருக்கும் மனித புதைகுழிகளுக்கு நான் சென்றிருக்கிறேன்.
எமது தேசிய ஐக்கிய அரசாங்கம் உருவாகியுள்ளதே சிலருக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது. மனித படுகொலை தொடர்பில் செயற்பட்ட வர்களுடன் யாழ்ப்பாணத்தில் ஆட்சியமைத்துள்ளனர். இனவாதிகள் சிலருடன் சிலர் உறவு கொண்டாடியுள்ளனர். இந்த நாட்டை தொடர்ந்து அழிவுக்கு உட்படுத்தியவர்கள் உருவாக்கிய வரலாறே தேசபந்து தென்னக்கோன். அக்காலங்களில் வானொலிகளில் தடை செய்யப்பட்ட வசனங்கள் இருந்தன. அது போன்று தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசபந்து என்ற வசனத்தை பாவிக்க முடியும்.ஆனால் ராஜபக்ச என பிரயோகிக்க முடியாது. ராஜபக்சவினர் 2005 ஆம் ஆண்டில் பாவம் செய்யவில்லை. யுத்தத்திற்குப் பின்னரே பாவம் செய்துள்ளனர். அதனால்தான் நாம் அவர்களை கைவிட்டோம் என்றார்.
![]()