இலங்கை

மாதாந்தம் 65,000 ரூபா சம்பளம் பெறும் அதிகாரிக்கு 110 பஸ்கள்

கேகாலை பஸ் டிப்போவின் அத்தியட்சகராக கடமையாற்றி வந்தவரின் பெரும் மோசடி, அம்பலமாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கோகாலை பஸ் டிப்போவின் அத்தியட்சகராக கடமையாற்றி மாதம் 65,000 ரூபா சம்பளம் வாங்கும் ஒருவருக்கு 110 பேருந்துகள் இருப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.கேகாலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்:

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளாலேயே கேகாலை பஸ் டிப்போ அழிக்கப்பட்டுள்ளது. 65,000 சம்பளம் வாங்கும் ஒருவருக்கு 110 பஸ்கள் இருப்பதானால் மாதம் ஐந்து இலட்சம் சம்பளம் வாங்க வேண்டும். கேகாலை பஸ் சாலையில் அளவுக்கதிகமாக ஊழியர்கள் இருக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.இதை, மீளெழுப்ப ஐந்து வருடங்கள் தேவை. அரசாங்கம் 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அவற்றை 2026 ஆம் ஆண்டின் ஜுன் மாதமளவில்தான் கொண்டு வர முடியும்.இலங்கை போக்குவரத்து சபையில், புற்றுநோய் போல் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. இதை மீட்பதற்கு பெரும் போராட்டம் நடத்துகிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *