உலகம்

அமெரிக்க தாக்குதல் – அதி உயர் பாதுகாப்பு கவுன்சிலை நிறுவிய ஈரான்

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில், அதி உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் நிறுவியுள்ளது.

இந்த அதி உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும்.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தலைமையில் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கவுன்சில் பாதுகாப்பு திட்டம், ஈரான் அயுதப்படைகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை கையாளும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி, ராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள்.

கடந்து ஜூன் மாதம் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.

12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனிடையே அமெரிக்காவும் ஈரானில் உள்ள அணுவாயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *