இலங்கை

இந்தியாவிடம் வழங்குவதை ரத்துச் செய்ய உத்தரவிடவும்; உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு 

டிஜிட்டல் அடையாள அட்டையை தயரிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை செல்லுபடியற்றதாக உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளரான அமானி ரிஷாட் ஹமீட் என்ற பெண்ணொருவரே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மனுவில் பிரதிவாதிகளாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அடங்கலாக 27 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்காக 2022 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கடந்த ஜனவரி மற்றும் ஜுன் மாதங்களில் அமைச்சரவையில் இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கோ மக்களுக்கோ அறிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக இலங்கையர்களின் உயிரியல் தகவல்கள் இந்தியாவுக்கு கிடைக்கலாம் என்றும் இதனூடாக இந்தியா இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் எ ன்றும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், இதனூடாக இலங்கையின் இறையாண்மை மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அத்துடன் இந்த நடவடிக்கைகள் ஊடாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுவதுடன், குறிப்பிட்ட அடையாள அட்டை வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பணிகளுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுவின் ஊடாக மனுதாரர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *