ரஷ்யாவில் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வரலாற்றில் ஆறாவது மிக மோசமான நிகழ்வு

ஹவாய் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் மற்றும் டெக்டோனிக்ஸ் பிரிவின் உதவிப் பேராசிரியர் ஹெலன் ஜானிசெவ்ஸ்கி, இன்றைய நிலநடுக்கம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பத்து நிலநடுக்கங்களில் ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (US Geological Survey) தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 2010 இல் சிலியின் பயோபயோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் 1906 இல் ஈக்வடாரின் எஸ்மெரால்டஸ்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவற்றுடன் வரலாற்றில் ஆறாவது மிக மோசமான நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலி நிலநடுக்கம் குய்ரிகுவே நகருக்கு வெளியே கடலில் ஏற்பட்டு 523 பேரைக் கொன்றதுடன், 3,70,000 க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்தது.
ஐந்தாவது மிக மோசமான நிலநடுக்கம், இன்றைய நிலநடுக்கத்தைப் போலவே, ரஷ்யாவின் காம்சட்கா கிராயில் தான் ஏற்பட்டது. இது 1952 இல் நிகழ்ந்ததுடன், “உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவான நிலநடுக்கம்” ஆகும்.
![]()