உலகம்

தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்தம் : மத்தியஸ்தம் செய்யவுள்ள மலேசியா

தாய்லாந்தும் கம்போடியாவும் தங்கள் எல்லைப் பிரச்சினையில் மலேசியா மத்தியஸ்தராகச் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதன் பின்னரும் பிரச்சனைக்குள்ளான பகுதியில் தாக்குதல் முன்னெடுப்பதாக இரு நாடுகளும் ஒன்றையொன்று கூறி வருகின்றன.

இந்த நிலையில், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டும், தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் திங்கட்கிழமை மாலை மலேசியாவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்போடிய மற்றும் தாய்லாந்து சகாக்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசியதாகவும், இந்த பிரச்சினையில் வேறு எந்த நாடும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் மலேசிய வெளிவிவகார அமைச்சர் மொஹமத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமது கோரிக்கையை ஏற்று தாய்லாந்து மற்றும் கம்போடியா பிரதமர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *