இலங்கை

இலங்கை வரலாற்றில் கறுப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகும்

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்இ குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இலங்கை வரலாற்றில் கறுப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது.

தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு, 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது – இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும்.

இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடாவானது, தமிழ் கனேடியர்களுடன் நிற்கிறது. இந்த நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம். அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக் கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *