இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்   (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *