கட்டுரைகள்

மூட நம்பிக்கை ஆடிமைத் தனம்… சின்னத்தம்பி குருபரன்

மூட நம்பிக்கை ஆடிமைத் தனத்துக்கும்,
அடிமைத்தனம் மூடநம்பிக்கையினதும் தோற்றுவாய்

முன்பெல்லம் (1960 க்கு முன்னர்) ஊருக்குள் ஓரிரு பிரபலமான போடிமார் இருப்பார்கள். ஆவர்கள் வைத்ததே சட்டம். அவர்களுக்குள் போட்டி, பொறாமை, உட்பூசல்கள் நிலவும். ஆவர்களால் உருவாக்கப்பட்ட பழக்க வழக்கம், சடங்குகள், சம்பிரதாயம், மரபுகள், ஒழுக்கலாறுகள் என்றவாறே இருந்தன. அதனையே மக்களும் பின்பற்றினர். சோத்துப் பத்து, நிலபுலம், மாடுபட்டி, செல்வாக்கு இருந்தால் அக்கிராமத்தில் அவரொரு குட்டி தாதாவாக இருப்பார். ஏன்? ஏதற்கு எனக் கேள்விகள் கேட்க முடியாது. ஆவர்களைக் தவிர மற்றவர்கள் சொத்துப்பத்து வைத்திருக்கவோ? நிலபுலம் வைத்திருக்கவோ விரும்பமாட்டார்கள்.

அவர்கள் மாத்திரமே மேலாடை அணிய வேண்டும். ஏனைய ஆண்கள் மேலாடை அணிய விடமாட்டார்கள். போடியாரைக் கண்டவுடன் ஒதுங்கி நின்று தோழில் கிடந்த துண்டைக் கையில் எடுத்துக் கமுக்கட்டில் இடுக்கிக் கொண்டு பயபக்தியோடு கைகூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். ஓதங்கி நின்று துண்டைக் கையிலெடுத்து வணக்கம் சொல்லவில்லை என்றால் ஏதொ ஒரு சந்தர்ப்பத்தில் தண்டனை வழங்கி விடுவார். அதெபோல்தான் அவர்கள் வீட்டுப்பெண்கள் உறவுக்காரப் பெண்கள் தவிரஎவரும் உள்ளாடை அணியக்கூடாது. ஓரு வகையான அடிமை வாழ்க்கை அது. ஆது மாத்திரமன்றி இத்தகையவர்களின் பிள்ளைகளைப் படிக்கவும் விடமாட்டார்கள். ஆக்காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களும், சொத்துப் சொத்து, நிலபுலம், செல்வாக்கு உள்ளவர்களின் பிள்ளைகள் மாத்திரமே இடைநிலை, உயர் கல்வியைத் தொடர்ந்தார்கள். இத்தகையவர்கள் மக்களை அடிமைகளாக்கி அவர்கள் உருவாக்கிவைத்த பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பழக்க வழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை இன்றைய நவீன விஞ்ஞான, தகவல் தொழினுட்ப உலகில் எதுவித மாற்றமுமின்றி அணுங்குப் பிடிபோல் தொடந்தும் பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. மாறவேண்டும். மாறிக் கொண்டிருக்க வேண்டும். ஆதுவே இயற்கையின் நியதியுமாகும்.

உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள் |ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையையே வழிபட்டான். மழை, நீர்நிலை, நிலம், காடு, மலை, குகை ஆகியவற்றையே வழிவட்டான். காலப்போகில் வழிபாட்டின்போது தான் பயன்படுத்திய ஆயுதங்களையும் வைத்து வழிபட்டான். ஆவனின் வழிபாட்டிடங்கள் காடு, மலை, நதி, குகை ஆகிய இடங்களிலேயே அமைந்திருந்தன. உருவ வழிபாடு இருக்கவில்லை. மாதவிலக்காகிய பெண்கள் இரவு, பகல் வேளைகளில் காடுகளைக் கடந்து செல்லும்போது மாதவிலக்கு காலத்தில் வெளியேறும் குருதி மணத்தை நுகர்ந்த மிருகங்கள் அவ்வகைப்பட்ட பெண்களை அடித்துக் கொன்று உணவாக உண்டன. ஆதற்காகவே மாதவலக்கான பெண்கள் வழிபாட்டிடங்களுக்கு வரவேண்டாம் எனத் தடுத்தனர். முpருகங்கள் உடலுறவுக்குத் தயாராகிய உடனே அதன் கருப்பப் பையில் இருந்து சுரக்கும் ஒருவகையான ஓமொன் யோனி மடல் ஊடாக வெளியேறும்போது அதிலிருசந்து ஒருவகை வாசனை ஆண் விலங்குகளை அழைத்து வந்துவிடும். அதுபொலவே மாதவிரக்காகிய பெண்கள் காட்டில் பாதுகாப்பின்றிப் பிரயாணம் செய்த போது அவர்களைத் தேடிவந்து கொன்று இரையாக்கின. இதுவெ அறிவியல் கூறும் உண்மை. ஆப்போது ஏதொ நோக்கத்த்துக்காக மாதவிலக்காகிய பெண்கள் தொடர்பாக அந்த முடிவெடுக்க. நவின அறிவியல்சார் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கோயில் திருவிழா, சடங்கு காலங்களில் மாதவிலக்கைக் காரணம்காட்டி ஊரில் இருந்தே விலக்கி வைக்கின்றோம்.

ஆதுபோலவே 20 ஆம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களில் மச்சம், மாமிசம் சைவ உணவாகவே கொள்ளப்பட்டது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிக (கி.மு 1500- 7000) அகழ்வாய்வுகளில் இருந்து மச்சம் எனப்படும் புலால் உணவு தமிழர்கள் மத்தியில் சைவ உணவாகக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்துக்களின் யாகங்களில் மாட்டிறைச்சி உட்படப் பல இறைச்சி (மாமிசம்) வகைகளை ஆகுதியாகப் படைத்து வந்ததோடுஇ அந்தணர்கள் (பிராமணர்கள்) இறைச்சி மீன் ஆகியவற்றைச் சாப்பிட்டும் வந்தனர். யாகங்களில் ஆகுதிகளாகப் பல மிருகங்கள் கொல்லப்பட்டதையும்இ மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டதையும் பார்தது வெறுப்புற்று புத்தரும்இ மாவீரரும் இந்து மதத்தில் இருந்து வெளியேறனர். பின்னர் புத்தர் பௌத்த மதத்தையும்இ மாவீரர் சமண மதத்தையும் தோற்றுவித்தார்கள். இந்த இரு மதங்களும் கொல்லாமைஇ புலால் உண்ணாமை ஆகிய கொள்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்து வந்தன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் பெருகவே அவர்களின் கொள்கையும் பிரபல்யம் பெற ஆரம்பித்தன. சமணத் துறவிகள் பரிநிர்வாணக் கொள்கையைக் கடைப்பிடித்ததோடு கொல்லாமைஇ புலால் உண்ணாமை ஆகியவற்றையும் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அதனைக் காலப் போக்கில் ஓரு சில அந்தணர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

சுவாமி விவேகாநந்தர் அமெரிக்கா கலிபோனியாவில் சேக்ஸ்பியர் கிளப்பில் 1900 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 ஆந் திகதி ஆற்றிய உரையில் “மாட்டிறச்சியைச் சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல” (ர்ந ளை ழெவ ய பழழன ர்iனெர றாழ னழநள ழெவ நயவ டிநநக) எனக் கூறி இருக்கின்றார். இது அவரது அமெரிக்கப் பிரசங்கத் தொகுதி- 3 இல் வெளிவந்திருக்கிறது. கண்ணப்ப நாயனார் திருக்காளகஸ்தி நாதருக்கு மாமிசத்தை சாதமாகப் படைத்து முத்தியடைந்திருக்கின்றார். அதிபத்த நாயனார் இறைவனுக்குத் தினமும் தானமாக மீனைக் கொடுத்து முத்தியடைந்திருக்கின்றார். திருநாவுக்கரசு நாயனார் ஆறாம் திருமுறை திருத்தாண்டகத்தில் சங்கநிதி பதுமநிதி…’ எனத் தொடங்கும் தேவாரத்தில் ‘அங்கமெல்லாம் குறைந்தழுகித் தொழுநோயராய்இ ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்இ கங்கைவார் சடைக்கரத் தார்க்கன் பராகில்இ அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” எனவரும் நான்கு வரிகளில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் பக்தியினைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் நந்திக்கு முன்னாலுள்ள பலிபீடம்ಯಾವುದು ನಂಬಿಕೆ? ಯಾವುದು ಮೂಢನಂಬಿಕೆ? | Udayavani – Latest Kannada News,  Udayavani Newspaper அக்காலத்தில் மிருகங்களைப் பலி கொடுக்கும் இடமாக இருந்ததனாலே அது பலிபீடம் என அழைக்கப்பட்டதாக மறைமலை அடிகள் குறிப்பிடுகின்றார். மேற்கு வங்காளத்தில் உள்ள அந்தணர்கள்(பிராமணர்) மீனைக் கடல் புஸ்பம்இ நீர்ப் புஸ்பம் எனக் கூறிக் கொண்டு மீனைச் சாப்பிட்டுக் கோயிலுக்குச் செல்கின்றனர். அதேபோல் காசியிலும் இமயமலை அடிவாரங்களில் சில பிரதேசங்களில் வாழும் சிவனின் தீவிர பக்தர்களான அகோரிகள் மனிதஇ மாமிச உணவுகளை உண்பதாகவும் கூறப்படுகிறது. பாண்டிச்சேரி ஆளுனர் தமிழிசை புலாலை இந்துக்களின் சைவ உணவாக அறிக்க வேண்டும் எனப் பாண்டிச்சேரிஇ தமிழ்நாட்டு அரசுகளைக் கேட்டிருக்கின்றார். இந்துக்கள் மரக்கறி உணவினை (ஏநபவை) ஏனுவம் மரக்கறி அல்லாத உணவினை (ழேn ஏநபவை) என்றுதான் கூறுகின்றனரே தவிர சைவ உணவு அல்லாதது எனக் கூறவில்லை.

அவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களில் இந்து மதத்தில் ஏற்பட்ட புத்தாக்கங்களும் கோயில்களில் மிருகபலி தொடர்பான எதிர்ப்புக்களும் காரணமாகப் பிற்காலத்தில் மச்சம்இ மாமிசத்தை ஓதுக்கி வைத்தனரே தவிர அவை சைவ உணவு அல்ல எனக் குறப்படவில்லை. இக்கட்டுரையில்ல் சில முக்கியமான தகவல்களை மட்டும் சுருக்கிக் கூறியிருக்கிறேன். இன்றுங்கூட இந்தியாவின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் ஆடுஇ மாடுஇ கோழி ஆகியவற்றைப் பலிகொடுத்துஇ சமைத்துப் படைத்து உண்டு மகிழ்ந்து செல்வதையும் அறிகிறோம்.

நமது வாழ்க்கையில் பெரும்பாலானவை உண்மை எதுஇ போலி எது என்பது பற்றிக் கண்டு கொள்ளாமலேயே காலத்தைக் கழித்து விடுகிறோம். ஒருவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தால் ஒருவர் செய்வினை என்பார்இ இன்னொருவர் சாப்பட்டுக்குள் ஏதோ மருந்து போட்டுக் கொடுத்துவிட்டனர் என்பார். மற்றுமொருவர் இது குடல்புண்ணால் ஏற்பட்ட வேதனை வைத்தியரைச் சந்தியுங்கள். அல்லது அதற்குரிய பரிகாரத்தைச் செய்யுங்கள் என்பார். அதற்கான தீர்வினை நோயாளிதான் எடுத்தல் வேண்டும். உண்மை அறிந்து போலியை விடுத்து சரியான தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே இறைவன் நமக்குப் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறான் என நம்புகிறோம்.

ಈ ಮೂಢ ನಂಬಿಕೆಗಳ ಹಿಂದಿರುವ ವೈಜ್ಞಾನಿಕ ಸತ್ಯಗಳು | Scientific Truth Behind  Superstitious Belief - Kannada BoldSkyஆதிகாலத்தில் மக்கள்; இயற்கையை வழிபட்டனர். சூரியன், வருணன் ஆகிய இயற்கைத் தெய்வங்களையும் தாம் பயன்படுத்திய ஆயுதங்களையும் வைத்து வழிபட்டனர். தேய்வங்களுக்கு உருவம் கொடுத்து வழிபடவில்லை. சிpந்துவெளி நாகரிக காலத்திலும் இயற்கையையும் பயன்படுத்திய ஆயதங்களையும் வழிபட்டு இருக்கின்றனர். பிற்காலத்து வழிபாட்டு முறையில் காணப்பட்ட மாற்றம் உருவ வழிபாட்டிற்கு வித்திட்டது. பிற்காலத்தைய சிலைகளையும், ஆயதங்களையும் ஆதாரமாகக் கொண்டு சிந்துவெளியில் காணப்பட்ட உருவங்களை ஒப்பு நோக்கி அவை சிவலிங்கம், சிவன், திருமால், முருகன், சக்தி, அம்மன் ஆகிய வழிபாடுகளும் நிகழ்ந்திருக்கலாம் என ஊகித்து நம்புகின்றனர். சிந்துவெளி காலத்தில் உருவ வழிபாடு இருந்தது என்பது ஊகமே தவிர முழுமையான உண்மையல்ல. ஆனால், சைவ சமய வழிபாடு நிகழ்ந்திருக்கிறது என’பது உண்மையாகும். இதனை ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வுகள் (கி.மு 3000- கி.பி 500). கீழடி அகழ்வாய்வுகள் (கி.மு 2000- கி.பி 600). கங்கை நதிக்கரைஅகழவுகள் (கி.மு 1500- கி.பி 500) யாவும் உறுதிப்படுத்துகின்றன.

நாகரிகம் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு பகைவரிடத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்த தலைவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நடுகல் வைத்தும். சிலைகள் வைத்தும் வழிபட்டு வந்தனர். அந்த வகையில் வதனமார். பரமநைனார். பேயாண்ட நைனார். பெரியதம்பிரான். பெரியசாமி. மதுரைவீரன். கறுப்பு. கருபபசாமி, பெரியண்ணசாமி போன்றோரை வழிபட்டு வந்தனர். இந்த உருவங்கள்கூட அந்தத் தெய்வங்களாக இருக்கலாம் என்ற வாதமும் நிலவுகிறது. எது எப்படி இருந்த போதிலும் ஆதி மதம் சைவ சமயம் என்பது உணர்ர்த்தப்படுகிறது. இந்து என்கின்ற சொல்லும்கூட கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருந்தே வழக்கிக்கு வந்திருகின்றது.

ஆரியரும் பிராமணரும் ஈரானில் (பாரசீயம) பாசீயம் என்ற மதப் பிரிவைச் சார்ந்தவர்கள். பாரசீயத்தில் காணப்பட்ட அதிக வெப்பம் அவர்களைப் புலம்பெயர் நாNhடி வாழ்க்கைக்கு வித்திட்டது.. அதனாலதான் ஆரியர்களும் பிராமணர்களும் உலகம் பூராகவும் இடம் பெயர்ந்து சென்றனர். பிராமணர்களின் னுNயு யூதர்களின் னுNயு யுடன் ஒத்துப் போவதாக அண்மைய ஆய்வுகள் சில நிருபித்திருக்கின்;றன. யூதர் புத்திசாலிகளாகவும் மற்ற இனத்தவருடன் சேர்ந்து வாழ விரும்பாதவர்களாகவும் காணப்பட்டனர். தம்மை உயர்ந்த சமூகம் என நம்புபவர்கள். ஆரியரும் பிராமணரும் சூரியனையும் இந்திரனையும் வழிபட்டவர்கள். அவர்கள் ஈரானில் இருந்து ஸ்ரெபஸ் புல்வெளி ஊடாகவும் பின்னர மேற்கு ஐரொப்பாவில் இருந்து கைபர் கணவாய் ஊடாகவும் நாடோடிகளாக கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்தியாவுக்கு வருகை தந்தவர்கள். அக்காலப் பகுதியில் இந்தியாவில் சிந்துவெளிப் பிரதேசத்தில் தமிழர் நாகரிகம் சிறப்புற்று நிலவி வந்தது.

ஆரிய, பிராமணர்கள சிந்துவெளிப் பிரதேசத்ரில் நிலவிவந்த மிக உயர்ந்த தமிழ் கலாசாரத்தைக்ಮೂಢನಂಬಿಕೆ ತಡೆ ಮಸೂದೆಗೆ ಬೆಕ್ಕು ಅಡ್ಡ ಬಂತು! கண்டு வியந்து நின்றனர். அதனால் ஏற்பட்ட வெறுப்பு, வஞ்சகம், பொறாமை, காழ்ப்புணர்வு காரணமாகப் படிப்படியாக சிந்துவெளி நாகரிகத்தைச் சிதைத்ததோடு மட்டுமல்லாது. மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றொழித்தனர். உயிர் தப்பியவர்கள் ஆதிச்ச நல்லூர், கீழடி, கங்கை ஆகிய பிரதேசங்களில் குடியேறினர். ஆரியர, பிராமணர் நாடோடிகளாக இந்தியாவுக்குள் நுழையும்போது தமது மொழியான சமஸ்கிரதத்தையும் பாசீய வழிபாட்டு முறையையும் தற்காப்பு ஆயதங்கள் சிலவற்றை மாத்திரமே கொண்டு வந்திருந்தனர். அவர்கள் பெண்களைப் போகப் பொருளாக மாத்திரமே பயன்படுத்தினர். சிந்துவெளியில் சகலவற்றிலும் பெண் சமத்துவம் பேணப்பட்டிருந்தது. சிpந்துவெளித் தமிழர்களால் பேணப்பட்டு வந்த வழிவாட்டு முறைகள் தெய்வங்கள் (சிவன், திருமால், முருகன், சக்தி, அம்மன்) பண்பாட்டுப் பாரம்பியங்கள் யாவற்றையும் தமதாக்கிக் கொண்டனர்;. துமிழ்களை அலையவிட்டனர். வேதங்கள், ஆகமங்கள், புராண, இதிகாசங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதினர். தமது வரலாற்றை தப்பாக எழுதினர். தமிழர்கள் தமது வரலாற்றினை எழுதவிடாது தடுத்தனர். அதனால்தான் தமிழர்களின் வரலாறு முழுமையாக இன்றுவரையும் எழுதப்படாமல் இருக்கின்றது. அவ்வாறு எழுதுவதென்றாலும் உண்மைகளை மூடிமறைத்து ஆரியர், பிராமணர், திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே எழுதினர். அந்தளவுக்குத் தமிழர்களை கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருந்து அடக்கி ஒடுக்கி வந்திருக்கின்றனர். இவ்வாறுதான் பாண்டிய, சோழ மன்னர்கள் பலரின் வரலாறும் சாசனங்களும் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன.

து முதலில் தோன்றிய தமிழ் மொழியும் சைவ மதமும், வழிபாட்டு முறைகளும் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இராமாயணம், மகாபாரதக் கதைகள் தமிழர்கள் மத்தியில் செவிவழியாகப் பேணப்பட்டு வந்தன. கி.மு ஆறாம் நுற்றாண்டில் இராமாயணத்தைப் புத்தர் முதன்முதலில் ஹெல மொழியில் அவருடைய தேவை கருதி எழுதினார். பிராமணர், ஆரியர்கள் வேதங்கள், ஆகமங்கள், மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் ஆகியவற்றைச் சமஸ்கிருத மொழியில் அடிமைத் தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் மையப்படுத்தித்; தமக்கு ஏற்றவாறு எழுதினர். தமிழ் கடவுளர்களான திருமாலையும் அவர்களது தெய்வமாக்கினர். குமாரரகசியம் உன்ற நூலை எழுதி இந்திரனின் மகளாகத் தெய்வானை என்றொரு பெண்னைப் புனைந்து முருகனுக்குத் திருமணம் செய்து வைத்துச் சுப்பிரமணியராக்கித் தமது கடவுளாக மாற்றினர். பழனி முருகனைப் பழனி ஆண்டவராக்கினர். புராண இதிகாசங்களில் அடிமைத்தனத்துக்கும் மூடத்தனத்துக்கும் முக்கியத்துவமளித்தனர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் இராமரைச் சாதாரண மனிதராகவும் சிவனிடமிருந்து அதிசக்திவாய்ந்த வரங்களைப் பெற்ற சிவபக்தனாக இராவணன் சித்திரிக்கப்பட சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இராமாயணங்களில் இராமர் கடவுளராகவும் இராவணன் கொடுரத்தனங்கள் நிறைந்த தமிழ் அரக்கனாகவும் சித்திரித்திருக்கின்றனர். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தை இரண்டும் கெட்டான் நிலையில் பல்வேறு நெருக்கீடுகளுக்கு மத்தியில் இராவணனை அரக்கனாகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் முக்கியத்துவம் கொடுத்தும் பாடியிருக்கின்றார்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் இருக்கு வேதத்தில் புருஷ சூத்மம் என்ற பிரிவு இருக்கவில்லை. பிராமணரும் ஆரியரும் திட்டமிட்டு உட்புகத்தி இருக்கின்றனர். புத்தர் காலத்திற்கு முன்னரும் கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் பிராமணர் முதன்மைப்படுத்தப்படவில்லை. நூட்டை ஆட்சி செய்யும் அரசர்களே முதன்மையில் இருந்தனர். இது தொடர்பாகப் புத்தருக்கும் ஆரிய பிராமணர்களுக்கும் இடையே பல கருத்து முரண்பாடுகள் இருந்ததாகப் பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வடநாட்டில் கார்வேலர் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது அரச சபையில் பிராமணர்கள் அதியுச்ச செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆரிய பிராமணர்கள் இருக்கு வேதத்தில் சாதிப்பாகுபாடு தொடர்பான புருஷ சூத்மம் எனும் பிரிவை இணைத்துக் கொண்டனர். அதில் பிராமணர்கள் தம்மை முன்னுரிமைப் படுத்திப் பிராமணர், சத்திரியர், வைசீயர், சூத்திரர் என்ற சாதிப் பாகுபாட்டை உருவாக்கிக் கொண்டனர். முன்னைய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அகழ்வுச் சான்றுகள் எதிலும் சாதிப்பாகுபாடு இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.பி முதலாம் நூற்றாண்டு வரையான சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் சாதி முறை இருந்தமைக’கான சான்றுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கார்வேலர் ஆட்சியில் ஆரிய, பிராமணர்கள் அரச சபையில் அதியுச்ச செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஆரிய பிராமணர்கள், கார்வேலர் கல்வெட்டில் தமிழ் மொழியைப் பின்தள்ளிவிட்டு, திராவிட மொழிக் குடம்பம் என்றொரு வகையை உருவாக்கித் தமிழ் மொழியைத் திராவிட மொழிக் குடம்பத்துள் இணைத்துக் கொண்டு சம்ஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தினர்.

ಮೂಢನಂಬಿಕೆ ವಿರೋಧಿ ಕಾನೂನು ಹೊಸ ಬದಲಾವಣೆಯ ಸ್ವಾಗತதமிழர் சாசனங்களை முதன்மைப்படுத்தினால் தமது மொழியும் வரலாறும் பின்தள்ளப்பட்டுவிடும் என்பதற்காகப் பெரும்பாலான வரலாற்றுச் சான்றாதாரங்கள் இந்திய மத்திய அரசாலும் மானில அரசுகளாலும் மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2024 வரை 44,000 க்கு மேற்பட்ட தமிழர் தொடர்பான வரலாற்றுச் சான்றாதாரங்கள் இந்தியா பூராகவும் மத்திய, மானில அரசுகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆதற்காகவே இந்திய மத்திய அரசும் சிவசேனா உள்ளிட்ட ஆரிய, பிராமண, திராவிட கடும்போக்காளர்கள் தமிநாட்டு அரசைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் சகல மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர்களாக இருந்து ஆட்சி செய்ய தமிழ்நாட்டில் மாத்திரம் திராவிடர்களான பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இன்றுவரை முதலமைச்சர்களாக இருந்து ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். ஒரு பூர்வீகத் தமிழன் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவதை அவர்கள் விடவும்மாட்டார்கள். விடப்போவதுமில்லை. நடிகர் விஜயக்காந்துக்கு நடந்ததுதான் அவர்களுக்கும் நடக்கும். தமிழ்நாட்டுத் தமிழ் மக்களை திரைப்படங்கள், நெடுந்தொடர், குறுந்தொடர் தொலைக்காட்சி நாடகங்கள் ஊடாகத் தெய்வம், பேய், பிசாசு, பாம்பு, சாத்திரம், மாந்திரிகம், சம்பிரதாயம் என்ற மூடநம்பிக்கைக்குள் நின்று பெண்களை வில்லிகளாக்கித் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றனர். இந்தச் சூத்திரத்துக்குள் அடங்காத திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எதுவும் தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது. விடவும் மாட்டார்கள்.

இலங்கையிலும் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் தமிழ்களின் வரலாற்றை மூடிமறைத்து தீபவம்சம், மஹாவம்சம், சூளவம்சம், போதிவம்சம், தாதுவம்சம், சத்தர்ம ரத்னாவலிய போன்ற வரலாற்று நூல்களில் பௌத்த, சிங்கள வரலாற்றை முதன்மைப்படுத்தித் தமிழர் வரலாற்றை இருட்டடிப்புச் செய்தனார். இராவணன் இலங்கையை ஆண்ட சிங்கள மன்னன் என்பதை நிருபித்தால் இலங்கையில் சிங்களவர் வரலாறு 4000 ஆண்டுகளைத் தாண்டிவிடும். கி,மு ஆறாம் நூற்றாண்டில் இராமாயணத்தை முதன்முதல் எழுதிய கௌதம புத்தர் இராவணனைப் பற்றியோ, அவன் இலங்கையை ஆட்சி செய்தமை பற்றியோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது பௌத்த, சிங்கள கடும்போக்குவாதிகளுக்குத் தடையாக அமைந்துவிட்டது. இந்தியாவில் 1350 க்கு மேற்பட்ட இராமாயணக் கதைகள் உள்ளன. ஆவற்றுள் 300 க்கு மேற்பட்ட கதைகளில் இராமர், சீதை, இலக்குவன், குகன் எல்லோரும் மீன் இறைச்சி வகைகளை உண்டதாகக் குறிபிடுகின்றன. அதேபோல் இந்திய மலைச்சாதி மக்களால் பேணப்பட்டுவரும் 50 க்கு மேற்கட்ட இராமாயணக் கதைகளில் இராமரும் இராவணனும் நணபர்கள், சீதையும் சூர்ப்நகையும் நண்பிகளாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஆக தமிழ்நாட்டு மக்களிடையே செவிவழியாகப் பேணப்பட்டு வந்த இக்கதைகள பற்றிய உண்மை விபரங்கள் இன்றுவரை கண்டறியப்படவில்லை. இராமர் அணை, குருசேத்திர யுத்தம் பற்றிய சில தகவல்களை மாத்திரம் கொண்டே ஊகிக்க முடிகிறது. ஆகழ்வாய்வுகள் செய்து நிரூபிக்க முனைந்தால் தமிழர்களின் வரலாறு நீண்டுவிடும் என்பதனால் இந்திய அரசு ஆய்வு முடிவுகள் வெளிவராமல் தடுத்து வருகிறது.

அத்வைத வேதாந்தத்தைப் போதித்த ஆதிசங்கரர் என்கின்ற பிராமணரைக் கொண்டு இந்து மதத்தை முதன்மைப்படுத்ததும் வகையில் அதiனைச் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என ஆறாகத் திட்டமிட்டுப் பிரித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான சிஞான சித்தயாரில் ‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தான் வருவார்’ என்ற பாடல் உள்ளது. சைவத்துக்குள் இருந்த முதன்மை இடம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் ஆரியர்களால் திணிக்கப்பட்ட இந்து மதத்துக்குள் பறிபோனது. தமிழ் மொழிக் குடும்பத்துக்குள்அடக்கப்பட வேண்டிய திராவிட மொழிகளை திட்டமிட்டுத் திராவிட மொழிக் குடும்பத்துக்குள் தமிழ் மொழியை உள்ளடக்கியது போலானது. ஆலயக் கிரியை முறைகளுக்குள் சமஸ்கிருதத்தைப் புகுத்தினர். ஆலயங்களில் இருந்து தமது வருமானத்தைப் பெருக்குவதற்காக வீண் செலவுகளைச் செய்ய ஏற்பாடு செய்தனர். பூசை, புனஸ்காரம், யாகங்கள், திருவிழாக்கள், பரிகார பூசைகள், சாந்திகள், வாலஸ்நபனங்கள், கும்பாபிசேகம், சங்காபிசேகம், பிரதிஸ்டைகள், தோச நிவர்த்தி பூசைகள் என்று அதனூடாக மூடநம்பிக்கைகளை வளர்த்தனர். தமது வருமாகத்தைப் பெருக்கிக் கொண்டனர். இத்தகைய மூடநம்பிக்கைகளுள் பல சிறு தெய்வ வழிபாடுகள் ஊடாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கண்ணகி அம்மன் சடங்கு (2025) காலத்தில் கற்றோர் செறிந்து வாழும் பழம்பெரும் கிராமம் ஒன்றில் மரணம் ஒன்று நிகழ்ந்தது. கண்ணகி அம்மன் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கிராமங்களில் பின்பற்றப்படாத மிக மோசமான பிற்போக்குத்தனமான நடைமுறைகளை இக்கிராமத்தில் பின்பற்றி வருகின்றனர். மரணமடைந்த ஒருவரின் வித்துடலுக்குச் செய்ய வேண்டிய கிரியைகள், கடமைகள் அவரவர் உரிமைகளுக்கூடாக வகுக்கப்பட்டவை. அதனை அரச சட்டங்கள்கூடக் கட்டுப்படுத்துவதில்லை. அவர்கள் முன்வந்து பின்பற்றுகின்ற சமூக, சமய, பண்பாட்டுப் பாரம்பரியங்களோடு தொடர்புபட்டவை. அதனை யாரும் எந்த நிறுவனமும் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது. அது அவரவர் அடிப்படை உரிமையாகும். அதனை அந்தக் குடும்பமும் நபர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் வரைதான் கிராமக் கட்டுப்பாடுகள், ஆலய பரிபாலன சபையினரின் கட்டுப்பாடுகள் செல்லுபடியாகும். எதையும் திணிப்பது அடிப்படை உரிமை மீறலாகும்.

வீடுகளில் நடைபெறும் மங்கல, அமங்கலச் சடங்குகள் யாவும் மற்றவருக்கு இடஞ்சல் இல்லாத வகையில் நடாத்தி முடிப்பதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. தடுப்பது சட்டப்படி குற்றமாகும். சமய அதிதீவிர பிற்போக்குவாதிகளால் பாமர மக்களை அடிமைகள்போல் நம்முள் திணித்து வைத்த மூடநம்பிக்கைகள் சமய இன்றைய நவீன விஞ்ஞான, தொழினுட்ப, செயற்கை நுண்ணறிவு கொண்ட நவ நாகரிக உலகில் குரங்குப் பிடிபோல் விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இன்றைய பல இளைஞர்கள் கையில் திறன்பேசிகளை (ளுஆயுசுவு Phழநெ) வைத்துக் கொண்டு உலகம் தமது கைகஜகுள் இருப்பதாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மூடநம்பிக்கைகள் யாவற்றையும் அவர்கள் மாற்றி அமைப்பார்கள். செயற்கை நுண்ணறிவு பலவற்றை மாற்றி அமைக்கப் போகிறது. இதனால் பல மத அடிப்படைவாதிகள் ஓரம்கட்டப்படப் போகின்றனர்.

ಮೂಢನಂಬಿಕೆ: ದೆವ್ವ ಬಿಡಿಸಲು ಹೋಗಿ 5 ವರ್ಷದ ಮಗಳನ್ನು ಕೊಂದ ಪೋಷಕರುஇப்போது விடயத்துக்கு வருகிறேன். கண்ணகி அம்மன் கதவு திறந்து சடங்கு நடந்து கொண்டிருந்தபோது ஊரில் மிகப் பிரபலமான பக்தை ஒருவர் இறந்திருந்தார். வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்வதற்கு இரண்டரை மணித்தியாலங்கள் மாத்திரமே ஆலய பரிபாலன சபையினரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தன. அந்த வித்துடலுக்கு வீட்டில் வைத்துச் செய்யப்பட வேண்டிய பந்தல் போடுதல், கூரை முடி வைத்தல், வெள்ளை கட்டுதல், பாடை கட்டுதல், சோடனை செய்தல், வாய்க்கரிசி போடுதல், வாயில் நீருற்றுதல், கால் கழுவுதல் ஈறாகப் பாரம்பரிய வழக்கின்படி செய்யப்பட வேண்டிய கிரியைகள்; எதுவும் செய்வதற்குக் கண்ணகை அம்மன் பெயரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேபோல் வித்துடலை அடக்கம் செய்யும்; மயானத்தில் செய்யப்பட வேண்டிய வாய்க்கரிசி போடுதல், நீர் ஊற்றுதல், கால் கழுவுதல், தேவாரம் பாடுதல், போன்ற நடைமுறைகள் எதுவுமே செய்யப்படாமல் மிருகங்களைப் புதைப்பது போல் புதைத்துவிட்டு வந்தனர். கட்டாடி, முல்லைக்காரன் ஆகியோரால் ஆற்றப்பட வெண்டிய கடமைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சமூகவியலாளர்கள் மரணச் சடங்கினை பச்சைச் சடங்கு முறை, உலர்ந்த சடங்கு மறை என இரண்டாக வகுப்பர். ஒருவர் இறந்தது முதல் வித்துடல் அடக்கம் செய்யும்வரை நடைபெறும் கிரியைகளை பச்சைச் சடங்கு முறைக் கிரியைகள் எனவும் அடக்கம் செய்த பின்னர் முப்பத்தோராம் நாள்வரை வீட்டில் நடைபெறும் பாரம்பரியக் கிரியைகள் யாவும் உலர்ந்த சடங்கு முறைக் கிரியைகள் என அழைப்பர். குறித்த மரண வீட்டில் பச்சைச் சடங்குகள் எதுவும் செய்யப்படவில்லை. அதேபோல், உலர் சடங்கு முறைகளான மூன்றாவதுநாள் பொங்கல் வைத்தல், எட்டாம் நாள் அமுது படைத்தல், வைகுந்த அம்மானை பாடுதல ஆகியன உரிய காலத்தில் செய்ய முடியாமல் கண்ணகி அம்மனின் எட்டாம் சடங்குவரை தடுக்கப்பட்டிருந்தது. வந்தையிலும் விந்தையான பிற்போக்குத் தனமான இந்த நடைமுறையை கண்ணகி அம்மன் கோயிவ் கொண்டிருக்கும் எந்தக் கிராமங்களிலும் அல்லாது இக்கிராமத்தில் மாத்திரமே அவதானிக்க முடிந்தது. கொடுப்பதற்குத்தான் தெய்வமும் இயற்கையுமே தவிர எதையும் தட்டிப் பறிப்பதற்கல்ல. தட்டிப் பறிப்பதாகவும் சாபமிடுவதாகவும் பலியெடுப்பதாகவும் சமய அதிதீவர அடிப்படைவாதிகள் அடிமைத்தனம் மூடநம்பிக்கைகள் ஊடாக கட்டுக் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். இவ்வாறு பகுத்தறிவு ரீதியாக உண்மை Nபுசுபவர்கள் யாருக்காவது எதுவும் நடந்தால் தெய்வம் தண்டித்துவிட்டதெனப் புரளியைக் கிழப்பி விடுவார்கள்.

ஒருவர் இறந்த பின்னர் அவரின் ஆத்மா (உயிர், ஆவி) நல்ல விடயங்கள் யாவற்றையும் விடுத்து எதிர்;மறையான (நேபயவiஎந) விடயங்களை மாத்திரம் தன்னுள் வைத்திருப்பதாக மதவாதிகளும் ஆவிகள் தொடர்பான ஆய்வுகள் செய்தவர்களும் நம்புகின்றனர். இறந்த பின்னர் ஆத்மா சக்தி பெற்று அகோர நிலையில் இருக்கும் என்றும். மரணச் சடங்கின்போது செய்யப்படும் ஒவ்வொரு கிரியைகளும் அதன் அகோரத்தையும் சினத்தையும் தணித்து 31 ஆம் நாள் கிரியையின் பின்னர் ஏனைய ஆத்மாக்களுடன் இணைத்து விடுவதாக நம்புகின்றனர். இத்தகைய நிலையில் ஒருவர் இறந்த பின்னர் உரிய நாட்களில் செய்யப்பட வேண்டிய கிரியைகளைச் செய்யாதுவிடும் பட்சத்தில் அந்த ஆத்மா இதற்குக் காரணமானவர்களுக்கும் தெய்வத்துக்கும் சாபம் கொடுக்காது என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது. மானிடர்கள் தெய்வத்துக்குச் சாபம் கொடுத்தமைபற்றிச் சமய, இதிகாச, புராண நூல்களில் இருந்து கற்றிருக்கிறோம். அதனால்தான் போலும் பெரும்பாலான ஆலயங்கள் சக்தியை இழந்து பேசும் தன்மையை இழந்திருப்பதாகப் பலரும் பேசிக் கொள்வதை அறிய முடிகிறது.

‘ஆண்டவன் சந்நிதியில் யாவரும் சமம்’ என்பார்கள். மூடநம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டு ஆலயங்களுக்குள் நான் பெரிது, எனது சாதி உயர்ந்தது, எனது குடி கோத்துpரத்துக்குத்தான் முன்னுரிமை எனக் கூறிக் கொண்டு, ஊழல், மோசடிகள் செய்து வாக்கு வாதம், சண்டையிட்டு இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறிக் கொண்டு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு இல்லாமல் பல ஆலயங்களை நீதிமன்றங்களில் நிறுத்தியுள்ளனர். இந்தப பாகுபாடுகளையெல்லாம் தெய்வங்களா தோற்றுவித்தன. இப்படியெல்லாம் நடக்க வேண்டும். அதையெலல்லாம் வைத்துக் கொண்டு மதம் என்ற போர்வையில் மக்களிடையே மூட நம்பிக்iயினைப் பல ஆலயங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனூடாக அடிமைத்தனம் கட்டியெழுப்பப்படுகிறது. பலர் அடிபட்டுக் கொண்டிருக்க இவற்றையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கிவிட்ட சந்தோசத்தில் ஆரிய, பிராமணிய, போலித் திராவிட சமூகம் தலை நிமிந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இதனால் நமது சமய நடைமுறைகள், சம்பிரதாயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகக் காரணமாக அமைகின்றன.

ಅಭಿವೃದ್ಧಿಗೆ ಅಡ್ಡಗೋಡೆ ಮೂಢನಂಬಿಕೆ - Grihshobha

இலங்கையின் 26 வருடகாலமாக நடந்த யுத்ததில் ஆரிய, பிராமணிய, திராவிட சமூகம் இலங்கையை ஆட்சி செய்த நாயக்க, நாயர் வம்சத்தினரைப் பாதுகாத்துத் தமிழர்களைக் கொன்றொழித்தனர். தமிழ்நாட்டில் இன்றுவரை ஒரு தமிழன் முதலமைச்சராக ஆட்சி செய்ய விடாத ஆரிய, பிராமண, திராவிடர்கள் இலங்கையில் தமிழர் தனிநாடு ஒன்றை உருவாக்கி ஆட்சி செய்வதை அனுமதிப்பார்களா?. அதனால்தான் ஆரிய, பிராமணிய, திராவிட இந்திய அரசு தமது பலத்தை இலங்கைக்கு வழங்கி யுத்தத்தை நிறைவு செய்து வைத்தது. இதற்குத் தமிழக அரசு (ஆரிய திராவிடரான முத்துவேலர் கருனாநிதி) பக்கபலமாக இருந்தது. அவர்கள் தழிழக அரசில் தாம் தமிழர் எனப் போலி வேடமிட்டுக் கொண்டு பேசியது ஒன்று, செய்தது மத்திய அரசுக்குச் சார்பாக நின்று இலங்கை அரசுக்கு உதவியமை. இந்த விடயங்கள் தொடர்பான ஆதாரங்களுடன் நான் எழுதிய கட்டுரைகள் பல இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. ஆரிய, பிராமண, திராவிடர்கள் அடிமைத்மனத்துக் கூடாக நம்மிடம் உருவாக்கி இருக்கும் மூடநம்பிக்கையாகும். அதனால்தான் அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு உதவும் என்ற மூடநம்பிக்கையோடு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய மாகாண சபைகள், தேய்ந்து கொண்டு போகும் தமிழர் தாயக நிலப்பரப்பு, கடுகுபோல் ஆகிக் கொண்டிருக்கு;ம் தமிழரின் அரசியல், பொருளாதார உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், யுத்த காலத்தில் இழைக்கப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பான விசாரனை, பொறுப்புக் கூறல் எதுவுமற்று இலங்கை அரசு காலத்தைக் கழிப்பதற்கு இந்திய மத்திய அரசே காரணமாக இருந்து வருகின்றன. இது தொடர்பான புரிதல் எதுவும் இல்லாமல் போலித் தமிழ் தேசியம் பேசிக் காலத்தைக் கழிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக வாக்கழித்து அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் ஒருவகையில் மூடநம்பிக்கைதான்.

இந்த உலகம் கரு, வெளி, ஆற்றல், ஈர்ப்பு விசை என்ற நான்கையும் அடிப்படையாகக் கொண்டு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் பெருவெடிப்பின் ஊடாக உருவானதென ஸ்ரிபன் கொக்கிம் உட்படப் பல விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். இதனையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் உலகத் தோற்றம் பற்றிய செய்யுள் ஒன்றில் தெளிவாகக் கூறியிருக்கின்றார்;. இதனைக் கூறுவதற்கு அவரிடம் எத்துணை விஞ்ஞானபூர்வ விளக்கம் இருந்திருக்க வேண்டும்.

நாம் படித்து அறிவைத் திரட்டிக் கொள்வது போலிகளையும், வேடதாரிகளையும் மூடத்தனங்களையும் என்ன, ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு நிகழ்ந்தது என வினவிப் பகுத்தறிந்து உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கே தவிர அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கல்ல. எது உண்மை, எது பொய்மை எனப் பகுத்தறிந்து பார்ப்பதே பகுத்தறிவு. இன்று பலர் நான் படித்தவன், புத்திசாலி என்ற லேபிலைக் கழுத்தில் கட்டிக் கொண்டு திரிகின்றனர். பாதகம் செய்வது பாவமெனச் சகல மதங்களும் போதிக்கின்றன. மதத்தையும் மதக் கொள்கைகளையும் தத்துவங்களையும் அப்படியே நம்புவதாக இருந்தால் ஏன் அவர்கள் பாவம் செய்ய வேண்டும். போட்டி, பொறாமை, சண்டைகள், சச்சரவுகளுக்காக வணக்கத் தலங்களை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு நல்லது கெட்டதை உணரும் பகுத்தறிவு தேவையில்லையா. அப்படியெனில் எல்லாமே பொய்யும் புரட்டும் கலந்த மூடநம்பிக்கையா?. 30 வீதத்துக்கு மேற்பட்ட பாடசாலை செல்லும் பருவத்தினர் வறுமை காரணமாகப் பாடசாலை செல்லாதிருக்கையில் ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பதை மறந்து கோயில்களை இடித்துக் கட்டுவதிலும் அதயுச்ச ஆடம்பரத்தில் பூசைகள், சடங்குகள், திருவிழாக்கள் நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது. உயிர்கள் யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை என நம்புவதாக இருந்தால் மக்காள் சேவை மகேசன் சேவை இல்லையா?. ‘அன்னயாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்;தல்’ என நவயுகக் கவிஞன் பாரதி பாடியது தவறா?. பக்கத்தில் இருப்பவர்கள் வறுமையில் வாடி வதங்கி இருக்கையில் நாம் செய்வது சரியா?. அல்லது பூர்சுவாக்கள் போல்தான் தொடர்ந்தும் வாழ்க்கையை ஓட்டப் போகின்றோமா?.

Loading

One Comment

  1. என்ன ஒரு அறிவார்ந்த உண்மையை எடுத்துரைக்கும் கட்டுரை. பல நூல்களை வெளியிட்டு பெருமையடித்துக் கொள்ளும் பல எழுத்தாளர்கள் இவற்றை எல்லாம் பற்றி சிந்தித்திருப்பார்களா? அல்லது தெரிந்தும் தெரியாமல் நமக்கு ஏன் வீண் வம்பு என்று இருப்பார்களோ? கண்ணை விற்று சித்திரம் வாங்குவதுபோல் தமிழையும் தமிழர் பெருமையையும் மீட்டெடுக்காமல் தமிழில் நூல்கள் எழுதி குவித்தென்ன பயன்? சமீபத்தில் ஒரு எழுத்தாளர் தமிழர் வரலாற்றையே கொச்சை படுத்தி நூல் வெளியிட்டு அதன் மூலம் ஒரு கோடி வரை சம்பாதித்துள்ளார். இவற்றிற்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் எழுதி நூல் வெளியிடும் எழுத்தாளர்களை பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும் கிடைக்கமாட்டேன் என்கிறார்கள். ஏதோ அத்தி பூத்தாற்போல் தமிழ் மொழியின் நிலையையும் தமிழர் நிலையையும் எடுத்தியம்பும்புவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசிலரே.

    இதையெல்லாம் விட கொடுமை தமிழையும் தமிழரையும் காக்க பாடுபடாவிட்டாலும் பரவாயில்லை ஏற்கனவே
    சாதி மதத்தால் பிரிந்து கிடக்கும் தமிழரை நாட்டாலும் பிரிக்கும் அரும்பணியை அற்புதமாக செய்கிறார்கள். மூடப்பழக்கத்தையும் உண்மையான இறைவனையும் பிரித்துப்பார்க்கத் தெரியாதவர்களும் இருக்கும்வரை விடிவு என்பது தொலைதூரம். நான் அறிந்தவற்றை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்பதுபோல் இருந்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் தமிழரைக் காக்க முடியாது.

    சங்கர சுப்பிரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *