இலங்கை

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் மேலும் ஐவர் கைது!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 சந்தேகநபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி இரவு, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனக் கூறி, ஒரு குழு குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதுடன் குறித்த மரணம் தொடர்பில் விசாரிக்கச் சென்ற பொலிஸார் மீதும் கூடியிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதியுள்ளனர்.

இதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்றுகூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை மற்றும் இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த 14ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 5 பேர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *