இலங்கை

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஒரு காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நேற்று வியாழக்கிழமை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, விசாரணைகள் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக பெர்னாண்டோ சுமார் மூன்று மணி நேரம் செலவழித்தார்.

விசாரணை அமர்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்னாண்டோ, “நான் காணி அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எனக்குத் தெரிந்தவற்றை அவர்கள் கேட்டனர். எனக்குத் தெரிந்ததை நான் அவர்களிடம் கூறினேன். இது 2021 மார்ச் 26 அன்று காணிச் சீர்திருத்த ஆணைக்குழு (LRC) சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முடிவு” என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த காணி கொடுக்கல் வாங்கல், முன்னாள் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *