பிரபல அமைச்சர் விரைவில் கைது?

அநுரகுமார அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள நாளேடொன்று நேற்று வியாழக்கிழமை இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளதுடன், குறித்த அமைச்சர் கூடிய விரைவில் பொலிஸாரால் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளது.
கல்கிசை பகுதியில் கட்டிடமொன்றுடன் உள்ள காணியொன்று சங்கமொன்றுக்கு சொந்தமானதாக இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் அதன் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கதி தான் அந்தப் பதவியை பெற்று, குறித்த இடத்தை சூட்சுமான முறையில் தனது பெயருக்கு மாற்றியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்தக் காணியை தான் பெற்றுக்கொண்ட பின்னர், அந்த இடத்தை அவர் வேறு தரப்பொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் குறித்த அமைச்சரின் அமைச்சு அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளதுடன், அடுத்தக் கட்டமாக விரைவில் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
![]()