கட்டுரைகள்

ஊகங்கள் உண்மையாகலாம்…  ஏலையா க.முருகதாசன்

எயர் இந்தியா விமானத்தை டெல்லியில் பராமரித்த போதோ அல்லது அகமதாபாத்தில் பராமரித்த போதோ ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் விமானம் விபத்துக்குள்ளாக வேணும் என்ற தி;ட்டமிடலுக்கு ஏற்ப விமானத்தில் பிழைகள் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் ஊகமாக வர வாய்ப்புண்டு. .இந்த விபத்துத் தொடர்பாக பொதுமக்களின் பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் உண்மையாகலாம் அவை மூடிமறைக்கப்படவும் கூடும்.

இரண்டு என்ஜின்களையும் இயக்கக்கூடிய எரிபொருள் வழி விமானம் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை எழுந்து தரையை நோக்கி விழும் போது உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகின்ற் உயரம் செல்லும் வரைக்குமான எரிபொருள் கிடைப்பதும் பின்னர் இயந்திரம் இயங்குவதற்குரிய எரிபொருள் இன்மையை ஏற்படுத்த அதன் வழி துண்டிக்கப்பட்டதா எனவும் சந்தேகப்படவும் இடமுண்டு. 

(சதி எனத் தலைப்பிட்டு,அகமதாபாத் விமானவிபத்து பற்றி 29 யூனில் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் எரிபொருள் இயந்திரத்துக்கு செல்லாமல் (நிறுத்தப்பட்டதாலேயே) விபத்துக்குள்ளானதா எழுதியிருந்தேன்.)

பொறியியலாளர்கள் என்பது பொதுச் சொல்லாகும்.பலநூற்றுக்கணக்கான துறைகளின் கல்வி விரிவாக்கமாக பொறியியல்துறை விரிவடைந்து வருகின்றது.ஒவ்வொரு தொழில்துறைசார் இயந்திரவியலுக்குள்ளும் பலநூறு பிரிவகளாக பகுத்துள்ள கல்வி உண்டு.

ஆனால் உலகவியல்பும் உலகை அண்டி வாழும் அசைவன அசையாதன என்பவை எல்லாம் நிலம்,நெருப்பு,ஆகாயம்,காற்று,நீர் என்பவற்றினாலேயே ஆக்கப்பட்டவை.இந்த ஐந்தும் இணர்டு தொகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒன்று வேதியல் மற்றது இயற்பியல்.இவை இரண்டினாலுமே உலகம் இயங்குகின்றது.

அவற்றை எங்கிருந்து எடுத்தாலும் அவை அனைத்தும் இந்த ஐந்துனுக்குள்ளேயே அடங்குபவை. அண்மை நாட்களில்: இந்தியா அகமதாபாத்தில் எயர் இந்தியா விமானமொன்று ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட உயரம் வரையும் சென்று,தொடர்ந்து பறக்க முடியாத நிலையில் ஒரு மருத்துவக்கல்லூரியின் கட்டிடத்தின் மேல்விழுந்து அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உட்பட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என எல்லாமாக 270 பேர் விபத்தில் உயிரிழந்த செய்தி உலகம் முழுவதும் பரவியதை உலக விடயங்களை அவதானிப்போர் பல்வேறுபட்ட ஊடகங்கள் ஊடாக அறிந்திருப்பார்கள்.அவர்களும் தத்தமது அறிவுணர்தலக்கேற்ப விபத்தினை ஊகப்படுத்தி வருகிறார்கள்.

இவ்விமான விபத்து ஏற்பட்ட போது இது சதியாகவுமிருக்கலாம் என நான் ஒரு கட்டுரையை அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் எழுதியிருந்தேன்.(யூன் 21 2025,யூன் 29 2025)
விபத்துக்கான காரணமாக எரிபொருள் நிறுத்தப்பட்ட இயந்திரக் கோளாறுதான் என்பதை நான் கோடிட்டுக் காட்டியதற்கான காரணமாக இந்திரத்திற்கான எரிபொருள் துண்டிக்கப்பட்ட நிலை அல்லது எரிபொருள் கிடைக்காத நிலையில்,விமான ரேபன் இயந்திரம் செயலிழக்கையில் மேற்கொண்டு பறக்க முடியாத நிலையில் விமானம் தரையை நோக்கி விழும் என்பது ஈர்ப்புவிசையின் விதியாகும்.இது இயற்பியல் கோட்பாடாகும்.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதற்கான உந்துசக்தி கிடைக்கும் போது வேறு ஏதாவது பிழை ஏற்பட்டு விமானம் தொடர்ந்து பறக்குமானால் விமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் விமானிகள் விமானத்தை அவசரமாக தரை இறக்கவே செய்வார்கள்.
தற்செயலாக நடக்கும் விடயங்களை பக்கசார்பு இல்லாமல் ஆய்வு செய்கையில் தற்செயல் என்பவற்றில்கூட சதி இழையோடியிருப்பதைக் காணமுடியும்.

இன்றைய கணிணியுக ஒழுங்கில்,தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியில் சத்திரசிகிச்சைகளில்;கூட, ஒரு நாட்டில் நடக்கும் சத்திரசிகிச்சைக்கு இன்னொரு நாட்டிலிருக்கும் மருத்துவர் சத்திரசிகிச்சை நடக்கும் போது,ஒன்லைன் காட்சி ஊடாக செயல்முறையைச் சொல்லி வருவதைப் பார்க்கிறோம்.

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! –  Athavan Newsஎனவே இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னராக இதன் இயக்கத் திறனைப் பரிசோதித்தவர்கள் உளவுஅமைப்பினரின் உத்தரவின் பேரில் தவறினை ஏற்படுத்தியிருக்கலாம்.(இது பாகிஸ்தானுக்காக உளவு ஏஜண்டுகளால் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்,ஏனெனில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையில் எப்பொழுதும் உரசல் இருந்து கொண்டேதானிருக்கின்றது,அல்லது பாகிஸ்தான் பக்கம் இந்தியாவின் கோபம் திரும்பட்டும் என்பதற்காக வேறு ஒரு நாடும் இச்சதியைச் செய்திருக்கலாம்)
இயந்திரத்துக்கு எரிபொருள் செல்லம் வழியமைந்த எரிபொருளைச் செல்லவிடுவது,நிறுத்தவதற்கான பொறிமுறை சதியாளர்களால், விமானம் ஓடுபாதையில் ஓடி மேலெழுந்தவுடன் கீழே விழும் என்பதுவரையான எவ்வளவு எரிபொருள் தேவை என்பதையும்,பொறிமுறை நிறுத்தப்பட்டதன் பின்பும் விபத்தாகும் வரை போதுமென்பதைத் தெரிந்து கொண்டு வரையறு வகுத்த ஒரு பொறியியலாளரின் அறிவுறுத்தலின்படி இச்சதி நடக்க வாய்ப்புண்டு.

ஒரு விமானத்தைக் காற்றில் மிதக்க வைத்து ஓடவிடுவதற்கு எவ்வளவு பொறியியல்துறை அறிவு தேவையோ அதேயளவிற்கு மேலாக அறிவும் படிப்பும் இயந்திரத்தை பழுதடைய வைப்பதற்கும் தேவை.

விமானத்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் அதன் தத்துவத்தையம் இயக்கத்தின் மீதான பொறிமுறையை கண்காணித்து அதை நிறுத்துவது சீரழிப்பது என்பதை கற்றுக் கொள்கிறார்கள்.
இதைச் சாதாரண ஒருவரால் செய்ய முடியாது.உளவு நிறுவனங்கள் பல்துறை கல்வியாளர்களையும் விற்பன்னர்களையும் கொண்ட நிறுவனமாகும்.

அதுவம் ஒரு பல்கலைக்கழகம் போன்றதே.விமான விபத்து நடந்ததை அறிந்த உடனேயே இது எரிபொருள் துண்டிப்பினால் நடந்ததாகவும் இது ஒரு சதி என்பதை உறுதியாக நம்பினேன்.
நாம் காரில் போகும் போது எரிபொருள் தீர்ந்துவருவதையும் எரிபொருள் நிரப்புநிலையம் இருக்கும் தூரத்தைக் கணித்து பைப் லைனில் இருக்கும் எரிபொருள் எரிபொருள் நிரப்பு நிலையம்வரை போவதற்கு போதும் என்று திருப்திப்படுவோம்.

விமானத்தக்கும் ஒரு காருக்கும் செயல் முறை அடிப்படை ஒன்றுதான் ஆனால் இயந்திரச் செயல்பாடும் பொறிமுறைச் செயல்பாடுகளும் மிகப்பெரும் பாரிய வேறுபாடுகள் உடையவை.
புகைவண்டிக்கான பொறிமுறையைக் கண்டுபிடித்த போது அதன் பொறிமுறை பாகங்களை நீராவியினால் உந்தித் தள்ளுவதன் மூலம் சக்கரங்களை உருளச் செய்தமையே அதன் பொறிமுறையாக இருந்தது.

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த  உத்தரவு! – Athavan News

பின்னாட்களில் புகைவண்டிகள் டீசல் எரிபொருளுக்கு மாறிய போது அங்கும் உந்தித்தள்ளும் பிஸ்ரன் பொறிமுறையே இருந்து வருகிறது.

விமானங்கள்கூட ஆரம்பத்தில் பிஸ்ரன் பொறிமுறையிலேதான் இயங்கியன.இப்பொழுது ரேபன் பொறிமுறையில் இயங்குகிறது.

இன்றைய இயந்திர உலகில் மிகச் சிக்கலான இயந்திரச் சுற்றுக்கள் உண்டு.அவையாவும்விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமான பிளாக் பாக்ஸ் மீட்பு - விசாரணை தீவிரம் -  லங்காசிறி நியூஸ் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவையாக இருக்கும்.

இயந்திரச் சுற்றில் எதோ ஒரு இடத்தில் தொடர்புத் தொய்வு ஏற்பட்டாலும் இயந்திரம் செயலிழக்க வாய்புண்டு.

உதாரணமாக ஒரு சைக்கிளின் ஒரு சில்லில் றிம்முக்கும் நடு அச்சுக்குமிடையில் இருக்கும் தொடு கம்பிகளில் ஒன்று இல்லாவிட்டாலும் உந்திக் கிடைக்கும் சக்தித் தொழில்பாட்டில் வேறுபாடு இருக்கும்.அதனை மிக உற்றுக் கவனித்தால் மட்டுமே எமது அறிவுக்குப் புலப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *