உலகம்

பங்களாதேஷ் இராணுவப் புலனாய்வுப் பிரிவைக் கலைக்கிறது

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், நாட்டின் மிக உயர்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பான இராணுவ புலனாய்வு பிரிவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸின் முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானைப் போன்ற ஒரு தீவிர இஸ்லாமிய நாடாக நாட்டை மாற்றுவதே இடைக்கால அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலுவான கவனத்தை ஈர்த்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை ஆயுதப்படைகளை பலவீனப்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை நசுக்கும் திட்டத்தின் ஒரு படி என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ புலனாய்வு சேவை கலைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மூன்று மூத்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் நாட்டிற்கு வருகை தந்தது குறித்தும் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் இராணுவ புலனாய்வு சேவையை கலைப்பதன் மூலம் பங்களாதேஷ் சர்வதேச பயங்கரவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *