உலகம்

காசா மீது மீண்டும் போருக்கு தயாராகும் இஸ்ரேல்

60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாகப் போர் இடம்பெற்று வருகிறது.

இந்தநிலையில், ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்மொழியப்பட்ட 60 நாள் போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காசாவில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *