திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்குரிய காணி; கன்னியாவில் அத்துமீறிய கட்டிடப் பணி உடனடியாக இடை நிறுத்தம்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கன்னியா காணியில், அத்துமீறிய இடம்பெற்றுவந்த கட்டிடம் கட்டும் நடவடிக்கை உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடம் தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஸ்குமாரின் நேரடி கள ஆய்வின் பின்னர் இந்தக் கட்டிட வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது,
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் அப்பகுதிக்கு தொடர்பு இல்லாத சிலர் அத்துமீறி கட்டிடம் அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அந்த இடத்துக்கு நேற்று முன் தினம் 9ம் திகதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார்,உபதலைவர் வைரவநாதன் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் சென்று நிலையை ஆராய்ந்து கட்டிடப் பணியை உடனடியாக நிறுத்தியுள்ளனர்.
![]()