செம்மணி புதைகுழி முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு

செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக
சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக பொலிஸாசாரிடம் முறையிட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது அதற்குரிய வழிகாட்டல்கள் முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்டது. முறைப்படி அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசாரிடம் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீர்வுகள் வழங்கக் கூடியதாக இருக்கும் என்றார்.
![]()