உலகம்

பாப்பரசர்  பதினான்காம் லியோவுடன் உக்ரைன் ஜனாதிபதி  சந்திப்பு!

இத்தாலி தலைநகர் ரோமில், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, பாப்பரசர் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார்.

ரோமில் நேற்று  ஜூலை 10 மற்றும் இன்று ஜூலை  11 ஆகிய திகதி களில் நடைபெறும் உக்ரைன் மீட்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, உக்ரைன்ஜனாதிபதி ஸெலன்ஸ்கி இத்தாலிக்கு வருகைத் தந்துள்ளார்.

இதையடுத்து, ரோமிலுள்ள வத்திக்கான்  நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான பாப்பரசரின்  கோடைக்கால தங்குமிடமான காஸ்டல் கண்டொல்ஃபோவில், பாப்பரசரை  சந்தித்து அவர் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பில்,  ஸெலன்ஸ்கி ரஷியாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை உக்ரைன் மீட்க உதவிய, பேராலயத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாகவும், இருவரும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அவசர தேவையைக் குறித்து கலந்துரையாடியதாகவும் வத்திக்கான்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கடந்த மே மாதம் ரஷியா நிராகரித்தவத்திக்கான்  தலைமையிலான உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக் குறித்து இருவரும் உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *