இலங்கை

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி; 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்- செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11வது நாளாக நேற்றைய தினம் நடைபெற்றது.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இதுவரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *