இலங்கை

பெரிய ஆயுதங்கள் மூலமே படு கொலைகள் நடக்கிறது

நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது பெரிய ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்ற என்றும், இதன் மூலம் நாடு ஆபத்தான நிலையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6 மாதங்களில் நாட்டில் 40 வரையிலான கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலைமை மிகவும் மோசமானது. இந்த சம்பவங்களில் பெரிய ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று மக்கள் இருக்கும் பிரதான இடங்களுக்கு வந்து துப்பாக்கிச் சூடுகளை நடத்துகின்றனர். சீசீரிவி கெமராக்கள் இருக்கின்றன என்றும் பார்ப்பதில்லை. இவை தொடர்பில் துப்பாக்கிதாரிகள் கணக்கில் எடுப்பதில்லை. ஆனல் அரசாங்கம் இது போன்று நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறையவும் இல்லை. தினமும் நடக்கின்றன. இது ஆபத்தான நிலைமையை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *