இலங்கை
முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேரின் மேலிருந்த கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு;ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரின் மேலிருந்த கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.
தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாகவும் இதனால் கீழே நின்ற ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி கலசமானது சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்படுகிறது.இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()