வட,கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்று ஐ.நா.ஆணையர் கூறுவது கடுமையான அச்சுறுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்கின் அழைப்பு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல ஆண்டுகளாக காணிகள் விடுவிக்கப்படுவதை ஒப்புக்கொள்வதைத் இந்த ஜெனீவா அதிகாரி தவிர்த்து வந்தார் எனவும் மேலும் தாமதமின்றி நிலங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ‘த ஐலன்ட்’டிடம் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழே வரும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிளிநொச்சியிலும் இடம்பெறுவது(காணிகள் விடுவிப்பு)ஒரு உதாரணம் என்றும் அவர்கள் கூறினர்.
2009 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் நிலங்களில், இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் 22,800 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தின் வசம் சுமார் 25,000 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது அது 600 ஏக்கராகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள், நிலம் விடுவிப்பு தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் மூலம் தெளிவுபடுத்துமாறு கொழும்புக்கும்,ஐ.நா அலுவலகத்திற்கும் சவால் விடுத்தனர்.
போரின் போது, யாழ்ப்பாணக் குடாநாடு நான்கு காலாட்படை பிரிவுகளுக்கு தாயகமாக இருந்தது, இதில் 53 ஆவதுபிரிவும் அடங்கும் – ஒரு காலத்தில் ரிசர்வ் ஸ்ட்ரைக் ஃபோர்ஸ் என்று அது அழைக்கப்பட்டது.
“உண்மை என்னவென்றால், 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் நிலத்தில், இப்போது நாங்கள் 2,500 ஏக்கருக்கும் குறைவாகவே வைத்திருக்கிறோம். மேலும் ஏதேனும் குறைப்பானது ஒட்டுமொத்த பாதுகாப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்,” என்று தற்போது பணியாற்றும் அதிகாரி(இராணுவ)ஒருவர் கூறினார்.
பெரிய அளவிலான தாக்குதல்கள், நீண்ட தூர பீரங்கிகள் மற்றும் ஊடுருவல்களை எதிர்கொள்ளும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஆயுதப்படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விரிவுபடுத்தி, உயர் பாதுகாப்பு வலயங்களை (HSZ) நிறுவின.
முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் ஜகத் டயஸ்,சமீபத்தில் தி ஐலன்டிடம், 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்ததாகவும், அடுத்த ஆண்டில் இராணுவம் படிப்படியாக நிலங்களைத் திருப்பித் தரும் பணியைத் தொடங்கியதாகவும் கூறினார். அரசாங்கமும் இராணுவமும் அதை தாங்களாகவே செய்ததாக கஜபா படைப்பிரிவின் மூத்த அதிகாரி கூறினார்.
வன்னிப் போர்முனையில் நிறுத்தப்பட்டிருந்த 57வது படைப்பிரிவின் தளபதி ஜெனரல் டயஸ், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுபவர்கள், விடுதலைப் புலிகள் இல்லாத காரணத்தினால் இவ்வளவு நிலங்களையும் விடுவிக்க முடிந்தது என்பதை குறைந்தபட்சம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
![]()