உலகம்

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் இராணுவம்  மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *