இலங்கை

இலங்கையில் தொடர்ந்தும் கைது இந்திரா காந்தியின் சட்டமே இன்று; இந்திய மீனவர்களுக்கு பாதிப்பு

இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சியின் போது 1975 இல் பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலையின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்களை இலங்கை கைது செய்வதற்கு காரணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை காரணமாக இந்திய மீனவர்களிற்கு சில இடங்களில் மீன்பிடிப்பதற்கு இருந்த உரிமை தாரைவார்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எமது மீனவர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து நாங்கள் கேள்விப்படுகின்றோம்,அவசரகாலநிலையின் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இதற்கு காரணம் இந்த உடன்படிக்கை காரணமாக இலங்கை கடற்பரப்பின் சில பகுதிகளில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை கைவிடப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் உண்மையான பாராளுமன்றம் செயற்பட்டிருந்தால் நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த முடிவு நிராகரிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள அவர் அந்த உடன்படிக்கையின் விளைவுகளை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகின்றது என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *