கட்டுரைகள்

சதி… பாகம்: 02… ஏலையா க.முருகதாசன்

சதி என்பதற்கான ஊகங்களும், சந்தேகங்களும்…

எயர் இந்தியா விமானத்தை டெல்லியில் பராமரித்த போதோ அல்லது அகமதாபாத்தில் பராமரித்த போதோ ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் விமானம் விபத்துக்குள்ளாக வேணும் என்ற திட்டமிடலுக்கு ஏற்ப விமானத்தில் பிழைகள் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் ஊகமாக வர வாய்ப்புண்டு. இந்த விபத்துத் தொடர்பாக பொதுமக்களின் பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் உண்மையாகலாம் அவை மூடிமறைக்கப்படவும் கூடும்.

இரண்டு என்ஜின்களையும் இயக்கக்கூடிய எரிபொருள் வழி விமானம் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை எழுந்து தரையை நோக்கி விழும் போது உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகின்ற் உயரம் செல்லும் வரைக்குமான எரிபொருள் கிடைப்பதும் பின்னர் இயந்திரம் இயங்குவதற்குரிய எரிபொருள் இன்மையை ஏற்படுத்த அதன் வழி துண்டிக்கப்பட்டதா எனவும் சந்தேகப்படவும் இடமுண்டு.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது என்பதன் சரியான ஆய்வும் படிமுறை தர்க்கரீதியான உண்மையான அறிக்கையும் நான்கு பகுதியினரை உள்ளடக்கியதால் எவரின் பிழையால் இவ்விபத்து ஏற்பட்டது என்பதனை அறிய முடியும்.

விபத்து நடந்த விமானத்தைத் தயாரித்த போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஏதாவது சிறு தவறாவது ஏற்பட்டிருக்கின்றதா என்பதை அவதானிக்கும் போது அப்படியும் இருக்கலாம் என்ற எண்ணவோட்டம் எழவே செய்கின்றது.

குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து - பயணிகள் நிலை என்ன? |  Plane crashes in gujarat live - what is the condition of the passengers? |  Gujarat Flight Accident live updates in tamil

இவ்விபத்துத் தொடர்பாக உலகளவில் பொதுமக்கள்,அவதானிகள்,ஊடகங்கள் ,ஊடகவியலாளர்கள்,ஓய்வுபெற்ற விமானிகள்,விமானப் பொறியிலாளர்கள்,விமான இயந்திரவியலாளர்கள்,விமானவியல் பேராசிரியர்கள,நிபுணர்கள்; என பலரும் பலவிதமான ஊகங்களையும் சந்தேகங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இவற்றில் பலர்,விபத்து நடந்த போது உடைந்துவிழுந்த விமானத்தின் கதவு இருந்த வழியாகக் குதித்துத் தப்பித்த ஒரு பயணி சம்பந்தமாக கூரிய பார்வையைச் செலுத்தி இவ்விமான விபத்துக்கு இப்பயணி செய்த சதிதான் காரணமாக இருக்கலாம் என்பதற்கு ஒரு கட்டிடத்தின் மெல் விழுந்த விமானத்திலிருந்து சில முகச் சிறுகாயங்களுடன் எந்தவிதமான பாரிய காயங்களோ எலும்பு முறிவோ ஏற்படாதவாறு எப்படித் தப்பித்தார் என்பதும்,அவர் விபத்து நடந்த விமானச் சுற்றாடலிலிருந்து எவ்வித பதட்டமும் இல்லாமல் கையில் கைத்தொலைபேசியுடன் இயல்பாக நடந்து போனதைக் கண்ட அவதானிகள் அவர்மீது உடனடியாக சந்தேகப்பட்டது மட்டுமல்ல இன்னும் அச்சந்தேகம் தொடர்ந்து கொண்டெதானிருக்கின்றது.

அத்துடன் அச்சந்தேகங்கள் நான்கு முக்கிய நிறுவனங்கள் மீதும் விழுந்திருக்கின்றது. முதலாவது இவ்விமானத்தைத் தயாரித்த போயிங் நிறவனத்தின் மீது,இரண்டாவது எயர் இந்தியா நிறுவனத்தின் மீது, மூன்றாவது விமானமோட்டிகள் மீது, நான்காவது விமானம் பறப்படுவதற்கு முன் விமானம் பறப்பதற்குத் தகுதியானதுதானா என்பதை அணுவணுவாக பரிசீலித்து சான்றிதழ் கொடுக்கும் பராமரிப்பு நிறுவனத்தின் மீதுமேயாகும்.

இச்சந்தேகம் நியாயமானதே.சந்தேகங்கள் மீதும் ஊகங்கள் மீதுமே விசாரணைகளை நடத்தி தர்க்க ரீதியான கேள்விகள் வழியாக உண்மைகளைக் கண்டறியும் வழக்கம் உண்டு.
இந்த விமான விபத்துக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று விசாரணை வழியாக உண்மையை நெருங்கிவிட்டோம் எனச் செல்கையில் இதுவல்ல என முடிவுகள் தெளிவு பெற்று வேறு திசையில் என விசாரணையாளர்களின் கவனம் செல்லலாம்.

உளவியலுக்கூடாக விசாரணைகளை மேற்கொள்பவர்கள் பொதுமக்களால்,நல்லவர்கள், அப்பாவிகள் ,வஞ்சகமில்லாதவர்கள் என நம்பும் மனிதர்களைக்கூட அட இவரா இதைச் செய்தவர் என ஆச்சரியப்படத்தக்கதாக கொழுக்குக் கேள்விகளைத் தொடுத்து உண்மையைக் கண்டறிவார்கள்.

Ahmedabad plane crash | Moment when Air India flight crashed in Gujarat

எயர் இந்தியா விமான நிறுவனம் தனது விமானங்கள் தரமானவைதான் என்பதை நிலைநிறுத்துவதில் அதன் ஆலோசனை வல்லுனர்கள் மிகக்: கவனமாகவே இருப்பார்கள்.
அதே நிறுவனத்தின் பராமரிப்பாளர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட பராமரிப்பு நிறுவனத்தின் பராமரிப்பாளர்களும் தரமானவர்களே என்பதை நிரூபிக்கவே எயர் இந்தியா முயற்சிக்கும்.
அதே வேளை எயர் இந்திய விமானிகளும் தகுதியானவர்கள்,அனுபவசாலிகள் அவர்கள் தவறுவிட வாய்ப்பில்லை என்பதை எயர் இந்தியா நிறுவனம் நிலைநாட்ட முயற்சிக்கும்.
இந்நிறுவனம் எதில் தங்கி நிற்கின்றது என்றால்,அவர்கள் மக்களுக்குச் சேவை செய்கின்றார்கள் என்பதில் அல்ல.அது ஒரு வணிக நிறுவனமேயாகும்.எயர் இந்திய விமானத்தை பயணிகள் தவிர்ப்பதைத் தவிர்க்கவே அந்நிறுவனம் விரும்பும்.

தவறுகள் எயர் இந்தியப் பக்கமானால் பயணிகள் அந்நிறுவனத்தை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். அடுத்து இவ்விமானத்தைத் தயாரித்த போயிங் விமானத் தயாரிப்புத் தொழிற்சாலை தனது தயாரிப்பில் எள்ளளவும் தவுறு இல்லை என்பதை நிரூபிக்கவே செய்யும்.
உலகளவில் எயர் பஸ் அளவுக்கு போயிங் விமானங்களும் எல்லா நாடுகளிலும் விமான சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

மேலே காட்டப்பட்ட நான்கு முக்கிய நிறுவனங்களிலும் தவறு இல்லையெனில் யாரிடம் இந்தத் தவறு இருக்கலாம் என்ற கோணத்தில் நுட்பமாகச் சிந்திக்கும் போது,பராமரிப்பவர்களிடமே சிந்தனை போயச் சேருகின்றது.

ஒடு பாதையைவிட்டு உயரக் கிளம்பிய விமான அடுத்தடுத்த பொறிமுறைகளுக்கூடாக தனது பயணத்தைத் தொடரமுடியாமல் போனதற்கு விமானியால்: போடப்பட்ட பொறிமுறைச்சுவிட்சின் இயக்கப் பொறிமுறை இயங்காவண்ணம் பராமரிப்பாளர்களால் சதி செய்யப்பட்டதா என்ற கேள்வி எழவே செய்கின்றது.

பொறிமுறைச் சுவிட்ச் போடபட்டாலும் அதன் தொடர்ச் செயல்பாட்டின் உத்வேகத்தைக் கொடுக்கும் பொறிமுறையினைச் செயல்படுத்த முடியாதளவுக்கு அதன் செயல்திறன் இருந்திருக்கலாமல்லவா எனவும் யோசிக்க வைக்கின்றது.

ஒரு இயந்திரத்தில் ஒரு பொறிமுறை உதிரிப்பாகம் அடுத்த செயலைச் செய்வதற்கான பொறிமுறையைத் தூண்ட முடியாதவாறு உதிரிப்பாகம் பிளஸ் என்ற அளவுக்கு மீறி இருந்தாலும் சரி மைனஸ் என்று அளவக்கு மீறி இருந்தாலும் சரி செயல்பாட்டில் வித்தியாசத்தைக் காண முடியும் அல்லது இயங்காது.

அதில் எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுகின்றேன்.நான் சிங்கப்பூரில்: மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறேன்.ஒரு வருடம் ஜெனரல் எலக்ரிக் என்ற றிப்சுவிட்ச் செய்யும் தொழிற்சாலையில் செற்றப்மென்னாகவும்,உதிர்ப்பாகம் உற்பத்தியாக்கும் இயந்திரத்திலும் வேலை செய்திருக்கிறேன்.

செற்றப்மென் என்பது றிப்சுவிட்ச்சில் உதிரிப்பாகங்களைப் பொருந்தும் போது ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்குப் பிறகு அதன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும். அதைக் கவனிக்காதுவிட்:டால் அந்த உதிர்ப்பாகங்களில் செயல்பாட்டில் முழுமையிருக்காது.அதன் பொறிமுறை எதிர்கார்த்த பலனைத் தராது.

தரக்கட்டுப்பாட்டாளர் அரை மணித்தியாலத்துக்கு ஒருமுறை றிப் சுவிட்சைப் பரிசோதிக்கும் போது தவறைக் கண்டு பிடித்தவிடுவார். பொருத்தும் இயந்திரம் நிறுத்தப்பட்டு,பிழைகள் சரிசெய்யப்படும்,அதனை நானும் செற்றப்மென்னாகச் செய்திருக்கிறேன்.அடுத்து உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வது,பெரிய இயந்திரத்தினுள் பலவித சென்ரிமீற்றர் அளவுகளில் உள்ள உலோக நாடாக்களை லேத் இயந்திரத்தினுள் செலுத்தி அதன் மூலம் றிப் சுவிட்சிக்குத் தேவையான உதிரிப்பாகங்களை வெட்டி எடுப்பது.

இந்த உதிர்ப்பாகங்களையும் தரக்கட்டுப்பாட்டாளர் பரிசோதிப்பார்.ஆயிசா என்ற பெண்ணே அப்பொழுது தரக்கட்டுப்பாட்டளாராக வேலை செய்தார். நூறில் ஒரு பங்களவில் உதிர்ப்பாகத்தின் அளவில் தவறு இருந்தாலும் உடனடியாகவே அந்த இயந்திரத்தை அவர் நிறுத்தச் சொல்வார்.பின்னர் எந்த இயக்கப் பொறிமுறையில் தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அதனைத் திருத்தியதன் பின்பே இயந்திரத்தை இயக்க அனுமதி உண்டு.

அமெரிக்காவின் ஜெனரல் எலக்ரிக் என்பது உலகளவில் பிரபலமான நிறுவனமாகும்.(எயர் இந்திய விமானத்தின் மின்சாரக் கட்டமைப்பை அந்த நிறுவனமே செய்ததாக செய்திகள் மூலம் அறிய முடிந்தது) அடுத்த இரண்டு வருடங்களும் யப்பானின் என்எம்பி என்ற விமானங்கள் உட்பட பலதரப்பட்ட இயந்திரங்களுக்காக உதிரிப்பாகங்கள் செய்து அதை ஒழுங்கமைக்கும் பறல்லிங் பகுதியில் வேலை செய்தேன்.

London-bound Air India plane with 242 people on board crashes soon after  take-off | The Straits Times

அப்பாகங்களின் தரக்கட்டுப்பாட்டினைக் கண்காணிப்பாவராக ஒரு யப்பானியரே வேலை செய்தார்.இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை லேத் இயந்திரங்கள் வெட்டி வருகையில் அப்பாகங்களில் காணப்படும் பிசுறுகளை பறல்லிங் மூலமாக பொலிஷ் செய்யப்படும்.

அவ்வாறு செய்யப்பட்டால்தான் இயந்திரங்களில் அப்பாகங்கள் சரியாகப் பொருந்தி எதிர்பார்த்த பொறிமுறையைப் பெறமுடியும்.

மிக முக்கியமான உதிரிப்பாமெனில் பொறியியலாளர்களும் என்னுடன் சேர்ந்து வேலை செய்வார்கள்:.ஒரு நாள் பித்தளை உலோகத்தில் மிகச் சிறிய உதிரிப்பாகங்களை பறல்லிங் செய்வதற்கு என்னுடன் பொறியியலாளர் இருவர் எனக்கு உதவி செய்தார்கள்.
அச்சிறிய பாகங்களை சிறிய பறல்லிங் கற்களிலிருந்து ஒவ்வொன்றாக என்னுடன் சேர்ந்து பொறியியலாளர்களும் பொறுக்கி எடுக்கும் போது நான் கேட்டேன் இது எதற்கு என்று,அதற்கு பொறியியலாளர் இது விமான இயந்திரத்துக்குரியது மிகக் கவனமாக பறல்லிங் செய்ய வேண்டுமென்றனர்.

தரக்கட்டுப்பாடு செய்து பார்த்த திருப்தியில்லாததால்,மீண்டும் பறல்யலிங் செய்யப்பட்டது.
உதிரிப் பாகங்களை பறல்லிங் செய்யப்படும் போது அதற்குப் பயன்படுத்தப்படும் அதற்கான கற்கள் அந்தந்த பாகங்களுக்குரியனவையாக இருக்க வேண்டும்.ஊற்றப்படும் திரவகத்தின் அளவும் சரியாக இருக்க வேண்டும்.இல்யைலயெனில் பொறிமுறைத் தவறுகள் ஏற்படும்.
யப்பான்: நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டாளர் தரக்கட்டுப்பாட்டில் மிகக் கவனமாக இருந்ததை நான்: கவனித்தேன்.

எனது மேற்கூறிய சிறிய அனுபவங்கள் வாயிலாக எயர் இந்திய விமான விபத்தை சரியான பொறிமுறையை உதிரிப்பாக இணைப்பு கொடுக்காதவகையில் மேலெழுதலும் அதன் தொடர்ச்சியான செயல்பாட்டை நிறுத்தி விமானத்தை விபத்துக்குள்ளாக்க தொடர்பொறிமுறையை திறனாக்கும் ஏதாவது ஒரு சுவிட்சில் ஒரு மில்லிமீற்றர் அளவில் தளர்வை ஏற்படுத்தினானாலே இயங்கியல் ஏற்படாது.

விமானிகள் தாம் சரியாகவே செயல்படுகிறோம் என நினைப்பார்கள்.ஆனால் அவர்கள் இயக்கிய சுவிட்சில் சதி மேற்கொண்டால் அடுத்த பொறிமுறைத் திறனை அடுத்தடுத்த செயல்கள் மூலம் எட்டவே முடியாது.

எனவே தப்பித்த அப்பயணி மீதும்,பராமரிப்பாளர்கள் மீதும் சந்தேகம் வலுப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

கறுப்புப்பெட்டி சொல்லப் போகும் விபத்துக்கான காரணங்கள் எவையென்றாலும் அவை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவையா???

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *