உலகம்

எகிப்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19பேர் உயிரிழப்பு!; 03பேர் படுகாயம்!

எகிப்து நாட்டின் மினொபியா மாகாணத்தில் உள்ள அர்ப் அல் சன்பாசா (Arb Al Sanbasa) கிராமத்தில் 22 தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று அஸ்மொன் என்ற பகுதியில் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 19பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

குறித்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 19 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *