இலங்கை

கனடாவில் “டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை” என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பங்கேற்ற பிரதமர்

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் “டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை” என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்வு மதத் தலைவர்களுக்கும் இலங்கை வம்சாவளி சமூக உறுப்பினர்களுக்கும் பிரதமருடன் தொடர்பு கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

வான்கூவரில் நடைபெறும் காமன்வெல்த் கற்றல் (COL) ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அமரசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை கனடா சென்றார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு, காமன்வெல்த் கற்றல் அமைப்பு மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், குளோபல் அஃபேர்ஸ் கனடாவின் ஒருங்கிணைப்பு குழுவினரும் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்றிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *