முகநூல்

யுரேனியம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

மஞ்சள் கேக் என்ற பெயரில் அழைக்கப்படும் யுரேனியம் என்பது U என்ற உயிரியல் குறியீட்டையும் அணு எண் 92 ஐயும் கொண்ட ஒரு கதிரியக்க வேதியியல் தனிமமாகும். இது மிகவும் கனமான, வெள்ளி நிறத்துக்கு சாய்வான வெள்ளை நிற உலோகமாகும்.
யுரேனியம் ஆக்ஸிஜனேற்றப்படும்போது கருப்பு நிறமாக மாற்றமடையும். யுரேனியம் 1789 ஆம் ஆண்டு ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிளாப்ரோத்தால் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
யுரேனியம் பெரும்பாலும் பாறைகளும் தண்ணீரும் உள்ள சுரங்கங்களில் காணப்படுகிறது. உலகம் ஆண்டுதோறும் 62,000 டன் யுரேனியத்தை உற்பத்தி செய்கிறது, இதில் 70% க்கும் அதிகமானவை கஸாகிஸ்தான், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து வருகிறது. யுரேனியம் தாது ஒரு இறாத்தல் சுமார் 24 டாலர்களுக்கு விற்கப்படுகிறது.
பயன்பாடுகள் யுரேனியம் பெரும்பாலும் அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது,
அத்தோடு இராணுவம், மருத்துவம் மற்றும் தொழிலுதுறை போன்ற துறைகளிலும் சில பயன்பாடுகள் அதன் மூலம் பெறப்படுகிறது.
அபாயம்
யுரேனியம் 90% செறிவூட்டப்படும் போது உயிரியல் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியுமாகும். இதன் மூலம் ஆதிக்க சக்திகள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவ பேரழிவு தரும் இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் அபாயம் உலகை அச்சுறுத்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *