இலங்கை

முல்லைத்தீவு, மன்னாரில் தீயணைப்பு பிரிவை நிறுவுக!; அமைச்சர்களிடம் ரவிகரன் கோரிக்கை கடிதம் கையளிப்பு

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைக் கடிதம் கையளித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில், முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்புப் பிரிவை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் உரை நிகழ்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை நிறுவ உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான சந்தன அபேரத்ன, விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *