இலங்கை

PTA ரத்து, OSA நீக்கம், ஈஸ்டர் விசாரணை மீள்தொடக்கம்: வோல்கர் டர்க் வலியுறுத்தல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யவும், ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை (OSA) முழுமையாக நீக்கவும், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் முடிவில் , ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்,

PTA சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யவும்

ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக ஒப்புதல் அளிக்கும் மசோதாவை விரைவாக நிறைவேற்றவும்

OSA சட்டத்தை திரும்பப்பெறவும்

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கவும்

பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீர்திருத்தங்களை விரைவில் மேற்கொள்ளவும் என்றும் வலியுறுத்தினார்.

இவை அனைத்தும் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்தும் முக்கிய அடிகள் என அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *