இலங்கை

நிலம் பிளந்து காண்பித்த செம்மணிப் படுகொலைகள்! நேரில் சென்று உறுதிப்படுத்திய ஐ.நா ஆணையாளர் – அணையா தீபத்தையும் அஞ்சலித்தார்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதபுதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் , தனது உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்கட்கிழமை (23) இலங்கையை வந்தடைந்தார்.

அவரது உத்தியோகபூர்வ விஜயத்தில் யாழ்ப்பாணத்தை இன்று வந்தடைந்த ஐ.நா ஆணையாளர் தற்போது செம்மணி மனிதபுதைகுழியைப் பார்வையிட்டுள்ளார் . அத்துடன் செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்டக்களத்துக்குச் சென்று அணையா தீபத்தை அஞ்சலித்ததுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டார்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை அறியவேண்டுமாக இருந்தால், இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரடியாக, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாக பலஅமைப்புக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *