உலகம்

கனடாவில் மாயமான இந்திய வம்சாவளி பெண்; குப்பை கொட்டும் இடத்தில் உடல் பாகங்கள் மீட்பு!

கனடாவில் சில மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண்ணின் உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

ஒன்ராறியோவில் உள்ள பர்லிங்டனில் (Burlington) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல்போனார்.

இந்நிலையில் அப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித் பொலிஸார் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

எனவே, அவர் வீட்டுக்குள் வைத்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்ட குப்பைகள் கொட்டும் இடத்தில் ஒன்ராறியோ பொலிஸார் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து குப்பை கொட்டும் இடத்தில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த உடல் பாகங்கள் மரபணு பரிசோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், அவை காணாமல் போன பெண்ணின் உடல் பாகங்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து குறித்த பெண்ணின் காதலரான ஜெஃப்ரி ஸ்மித் (Jeffery Smith) கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *