நீதியான போராட்டத்தில் அநீதிக்கு துணை போன போலிதேசியவாதிகள் கலந்துகொள்ளக்கூடாது

நீதியான போராட்டத்தில் அநீதிக்கு துணை போன போலிதேசியவாதிகள் கலந்துகொள்ளக்கூடாது என வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
மனித புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம் போராட்டத்தில் இரண்டாம் நாள் அமைதியான முறையில் முன்னேடுக்கப்பட்டுவருகிறது இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடக்கு கிழக்கு எங்கும் காணப்படுகின்ற மனித புதைகுழிக்கு நிதி கேட்டு செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கு நிதியான விசாரணை வேண்டி மக்கள் செயல் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் முன்னேடுக்கப்பட்டுவருகிறது நீதி என்பது உலகத்தின் அடிப்படை விடயமாக இருக்கிறது அனைத்து சமயங்களும் ஆன்மிகமும் நீதியைவலுயுறுத்துகின்றனவே தவிர அநிதியை வலியுறுத்துவதாக இல்லை அநிதிக்கு எதிராக நீதியை நிலைநீட்டுகின்ற போராட்டம் என்பது காலம்காலமாக நடைபெற்றுவந்திருக்கிறது.
இது நீதிக்கான குரல் எந்த ஒரு தனிமனிதனுக்காகவோ கட்சிக்காகவோ பொது அமைப்பிற்காகவோ செல்லப்படும் விடயம் அல்ல இன்று போலித்தனங்களும் கபடதனங்களும் சுத்துமாத்துகளும் சூழ்ச்சிகளும், நரித்தனங்களும் பெருகியிருக்கத்தக்க சூழ்நிலையிலே தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ளும் அத்தனை பெரையும் மக்கள் ஒன்றுதிரண்டு ஒதுக்க வேண்டும் அதுதான் உண்மையான நீதியாக இருக்கும்.
தமிழ்மக்களுக்காக தமிழ்தேசியத்திற்காக உழைப்பவர்கள் மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவர்களுக்காக செயல்படவேண்டும் போலிதேசியத்திற்காக அங்கும் இங்கும் திரிந்து மக்களை ஏமாற்றவேண்டாம். அணையாவிளக்கு போராட்டத்தில் ஏனைய தமிழ்தேசத்து மக்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை வலுச்சேர்க்க வேண்டும் என்றார்.









![]()